ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – மொழி #63

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(மொழி 62: https://www.facebook.com/SwamiChidbhavananda/photos/a.311689515572647.70928.279312812143651/910192439055682/?type=3 )

அகங்கார நிலைகள் – பழுத்த அகங்காரமும், பழுக்காத அகங்காரமும்

பரப்பிரம்மத்தைச் சாக்ஷாத்கரித்த ஞானி ஒருவனுக்கும் பக்திநிலை உண்டாவதற்குக் காரணம் யாது? உள்ளது ஒரே பொருள் என்று கண்டறிந்தவனுக்கு அன்பு பாராட்டுகின்றவன், அன்பு பாராட்டப் பெறுகிறவன் என்ற பேதங்களெல்லாம் ஒழிந்துவிடுகின்றன. அப்படிப் பேதம் ஒழியப் பெற்றவனுக்குத் திரும்பவும் அன்பு நிலை ஏன் வர வேண்டும்?

பரப்பிரம்மத்தைச் சமாதி நிலையில் சாக்ஷாத்கரிக்கும் ஞானிக்கு அந்தச் சமாதி நிலையில் ஒருவிதமான பேதமும் இல்லை. அன்பு செலுத்துபவர், அன்பை ஏற்பவர் என்கின்ற வேற்றுமை ஒன்றையும் சமாதி நிலையில் அவன் காணமுடியாது. ஆனால், சமாதிநிலை கலைந்து வியவகாரிக நிலைக்கு மனது கீழே இறங்கி வரும்பொழுது சிறிது அகங்காரம் உரு எடுக்கின்றது. அகங்காரம் இருக்கின்றபொழுது பக்தி பண்ணுவது ஒன்றே உற்ற உபாயம். பக்தி பெருகப்பெருக அகங்காரம் பண்பட்ட அகங்காரமாகின்றது. பிறகு அது மறைந்து போவதற்கும் தகுதியுடையதாகிறது. ஆனால் உலகப் பற்றுடைய சாதாரண மனிதனுக்கோ அகங்காரம் ஒருபொழுதும் அழிந்து போவதில்லை. உறுதி பெற்றதாக அது அவனுடைய உள்ளத்தில் இருக்கின்றது. இரண்டு பாறைகளின் இடுக்கில் முளைத்திருக்கும் அரசமரத்துக்கு ஒப்பானது உலகப் பற்று உடையவனுடைய அகங்காரம். அந்த அரச மரத்தை நீ எத்தனை தடவை வேண்டுமானாலும் வெட்டிக்கொண்டே போகலாம். புதியது புதியதாக அது தழைத்துக்கொண்டே வரும். அரச மரத்தை இன்று வெட்டு; நாளைக்குத் திரும்பவும் அது தலைதூக்க ஆரம்பிக்கிறது.

ஞானத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. குணாதீதத்துக்குப் போனவர்கள் திரும்பவும் அகங்காரத்தைப் பெறுகிற நிலைக்கு வருவதில்லை. குணாதீதத்துக்குப் போவதற்குப் பதிலாகச் சுத்த சத்வகுணத்தில் இருந்துகொண்டு பரம்பொருளை உணரலாம். அதையும் ஞானநிலை என்றே பகர வேண்டும். சமாதியில் அத்தகைய ஞானநிலை உண்டாகிறது. சமாதி கலைந்ததும் திரும்பவும் அகங்காரம் தோன்றுகின்றது. இந்த அகங்காரம் எங்கிருந்து வந்ததென்பது யாருக்கும் விளங்குவதில்லை. எப்படியோ அது முன்னிணியில் வந்து நிற்கிறது.

தூங்குகிற மனிதன் ஒருவன் தன்னைப் புலி பிடிக்க வருவதாகக் கனவு காண்கிறான். பயந்து திடீரென்று கனவிலிருந்து விழித்துக் கொள்கிறான். விழித்துக்கொண்டதும் பயம் போய்விடுகிறது. ஆனால், நெஞ்சம் துடிதுடிக்கிற செயல், பயம் போனபிறகும் நிகழ்ந்து வருகிறது. அப்படி நெஞ்சம் துடிப்பதற்குச் சமானமானது அகங்காரம். அகங்கரிப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஞானி சமாதியில் உணர்கின்றான். எல்லாம் ஈசன் உடைமை. எல்லாம் ஈசன் செயல் என்பதை ஞானி சமாதியில் உணர்கின்றான். ஆயினும் அதன் பிறகும் அவனிடத்து எப்படியோ கொஞ்சம் அகங்காரம் தோன்றிவிடுகிறது. அகங்காரத்தின் போக்கை முற்றிலும் அறிந்துகொள்ள நம்மால் முடியாது.

(அடுத்த வியாழன் அன்று தொடரும்…)

மூலம்: மஹேந்திர நாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

One thought on “ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – மொழி #63

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s