ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – மொழி #64

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(மொழி 63: https://swamichidbhavananda.wordpress.com/2015/11/19/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A-3/)

அகங்காரத்தை அழிப்பது எப்படி?

காளைமாடு ஒன்று இருக்கின்றது. அது ‘ஹம் ஹம்’ என்று கத்துகிறது. அது அஹம் அல்லது நான் எனப் பொருள்படுகிறது. பிறகு அதை ஏரில் பூட்டி வேலை வாங்குகிறார்கள். அகங்காரம் வந்ததின் விளைவு அது. சாகும் வரையில் அதற்கு ஓய்வு இல்லை. செத்த பிறகும் அதற்குத் தொந்திரவு உண்டு. தோலை உரித்து மத்தளமாகக் கட்டுகிறார்கள். அதை இரண்டு புறமும் அடி அடியென்று அடிக்கிறார்கள். அது ‘டம் டம்’ என்று சப்தம் கிளப்புகிறது. டம் டம் என்பது வெளிப்பகட்டுக்கு அறிகுறி. இப்படியெல்லாம் ஆணவ அகங்காரம் இருக்கும்வரையில் துன்பத்துக்கு முடிவில்லை. செத்துப்போன காளை மாட்டின் நரம்பை எடுத்து வில்லாகக் கட்டுகிறார்கள். அந்த வில்லைக்கொண்டு பஞ்சு உடைக்கிறார்கள். பஞ்சு உடைக்கும்பொழுது அது ‘துகு துகு’ என்னும் ஓசை இடுகிறது. துகு என்னும் சொல் நீ எனப் பொருள்படுகிறது. வில் உண்டுபண்ணும் ஓசையில் இனிமை உண்டு. அதினின்று மனிதன் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் என்னும் அகங்காரம் இருக்கும் வரையில் மனிதன் படும் துயரத்துக்கு முடிவில்லை. துன்ப துயரங்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம். நான் என்பதை ஒழித்துவிட்டு, ஈசா! யாவும் நீயே, எல்லாம் நின் செயல்; நீ தலைவன்; நான் தொண்டன் நீ தாய், நான் சேய் – இத்தகைய மனப்பான்மை வந்துவிட்டால் துயரங்களெல்லாம் அப்பொழுதே ஒழிந்துபட்டுப் போய்விடுகின்றன.

ஒருதடவை ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயனைப் பார்த்துக் கேள்வி ஒன்றைக் கேட்டார்: ‘மஹா வீரா, நீ என்னை எங்ஙனம் பாராட்டுகிறாய்?’ இது ராமர் கேட்ட கேள்வி.

அதற்கு மாருதி பதில் உரைப்பாராயினர்: ‘பிரபோ, என்னை நான் தேகமாகக் கருதும்பொழுது நீர் ஆண்டவன்; நான் அடிமை. என்னிடத்து ஜீவபோதம் தலையெடுக்கும்போது நீ பூரணன்; நான் அதில் ஓர் அம்சம். உபாதிகளையெல்லாம் ஒழித்துவிட்டுச் சுத்த சைதன்யமாய் இருக்கும்பொழுது நீயே நான், நானே நீ.’

அதைக் கேட்டு ராமபிரான் பெருமகிழ்வடைந்தார். ஏனென்றால் அதுவே எல்லா உயிர்களுக்கும் உரிய உண்மையாகின்றது.

அகங்காரம், மமகாரம் ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம். மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அக்ஞானத்தில் உழல்கின்ற ஒருவன் இங்ஙனம் தன்னையும் தன் உடைமைகளையும் தெய்வத்திடத்திருந்து வேறுபட்டவைகள் என்று கருதுகின்றான். இதற்கு நேர் மாறாக யார் ஒருவன் ஞானத்துக்குத் தகுதியுடையவனாகப் பரிபாகம் அடைந்து வருகின்றானோ அவன் ‘ஈசா, நீயே அனைத்துமாகின்றாய். உனக்கு அன்னியமாக இப்பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லை. எல்லாம் நின் செயல், எல்லாம் உன் உடைமை’ என்று கருதுகின்றான்.

(தொடரும்)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

 

Advertisements

One thought on “ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – மொழி #64

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s