Sri Paramahamsarin Apta Mozi-65

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – மொழி #65

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி- மொழி 64: https://swamichidbhavananda.wordpress.com/2015/11/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A-5/)

 மரணத்தைப் பற்றிய சிந்தனை

ஆத்ம சாதகன் ஒருவன் அடிக்கடி மரணத்தைப் பற்றி நினைக்க வேண்டும். பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் மரணத்துக்கு உள்ளாகின்றன. அது இவையாவையும் எடுத்து விழுங்கிக் கொண்டிருக்கிறது. மரணத்தினின்று தப்பித்துக்கொள்ள யாருக்கும் இயலாது. ஜடப் பொருள்கள் என்பவையும் நாளடைவில் மறைந்துபட்டுப் போய்விடுகின்றன.

சந்தைக் கடைக்கு ஜனங்கள் வருகிறார்கள். வந்த காரியம் முடிந்ததும் அவர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். யாரும் சந்தைக் கடையிலேயே நிலைத்திருப்பதில்லை. நிலைத்திருக்க விரும்புவதுமில்லை. சந்தைக்கு ஜனங்கள் வருவது போன்று நாம் அனைவரும் இவ்வுலகத்தினுள் வந்திருக்கிறோம். அவரவர் செய்ய வேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. அவைகளைச் செய்து முடித்தானதும் இவ்வுலகினின்று வெளியேறியாக வேண்டும். அப்படி வெளியேகப் பெரும்பாலர் விரும்புவதில்லை. அக்ஞானமே அதற்குக் காரணமாகும். விரும்பாவிட்டாலும் வேளை வரும்பொழுது யாரும் வெளியேகுவதினின்று தப்பிக்க முடியாது. இவ்வுலகில் நாம் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

பணக்காரன் ஒருவன் அழகியதொரு தோட்டம் வைத்திருக்கிறான். அத்தோட்டத்துக்கு மேற்பார்வையாளன் ஒருவன் இருக்கிறான். தோட்டத்தைப் பார்க்கப் போகிற ஜனங்களிடத்தில் அந்த மேற்பார்வையாளன் இதெல்லாம் எங்கள் போராட்டம் என்று உரிமை பாராட்டிப் பேசுகின்றான். ஆயினும் அவன் புரிகின்ற பணியில் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துத் தோட்டத்துக்குச் சொந்தக்காரன் அம்மனிதனை வேலையினின்று நீக்கிவிடலாம். அப்படி வேலையினின்று நீக்கப்பெற்ற பிறகு அத்தோட்டத்திலிருந்து அவன் எதையும் எடுத்துக்கொண்டு போக முடியாது. தனக்குச் சொந்தமாயிருந்த ஜாதிக்காய் மரப்பெட்டியையும் எஜமானனுடைய உத்தரவு பெறாது அவன் வெளியே கொண்டு போக முடியாது. அது போன்று இவ்வுலகில் வாழுகின்ற நாம் நமக்கு ஏற்படும் கடமைகளையெல்லாம் நமக்குக் கடவுள் இட்டவைகள் என்று அவர் பொருட்டுச் செய்து முடிக்க வேண்டும். வேலையினின்று நம்மை மீட்டெடுப்பது அவனுடைய இச்சை. அவன் கையில் கருவியாயிருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 (தொடரும்)

 மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s