Sri Paramahamsarin Apta Mozi – 66

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 66

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 65: http://www.swamichidbhavananda.wordpress.com/2015/12/03/sri-paramahamsarin-apta-mozi/)

கடவுள் சிரிக்கும் சந்தர்ப்பங்கள்

அகங்காரம்

இரண்டு சந்தர்ப்பங்களில் பகவான் சிரிக்கிறார். முதல் சந்தர்ப்பம் ஒரு டாக்டரைப் பற்றியது.

சிறுவன் ஒருவனுக்கு நோய் வந்துவிடுகின்றது. அவன் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். அதைக் குறித்துத் தாய் கவலைப்படுகிறாள். சிறுவனுக்குச் சிகிச்சை செய்யும் டாக்டர், ‘அம்மா, நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் மகனைக் காக்கும் பொறுப்பு என்னுடையது. அவனுக்கு ஆபத்து ஒன்றும் வாராது நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கின்றார்.

அவ்வேளையில் பகவான் பகர்கிறார்:

‘இச்சிறுவனுடைய பூலோக வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. இதற்கு மேல் அவன் ஈண்டு உயிர் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விடத்தினின்று நாம் அவனை மரணத்தின் வாயிலாக வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல திருவுளம் கொண்டோம். ஆயினும் இம்மருத்துவர் இவனைக் காத்து வைப்பதாகப் பேசுகிறார்’ என்று சொல்லிக் கடவுள் நகைக்கிறார்

மமகாரம்

இரண்டாவது சந்தர்ப்பம் இரண்டு சகோதரர்களைப் பற்றியது. அவர்களின் தந்தை காலமான பிறகு அவர்கள் சொத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பூமியைக் கயிறு கொண்டு அளந்து இப்பகுதி எனக்குரியது. அப்பகுதி உனக்குரியது என்று முடிவு கட்டுகிறார்கள். அத்தருனத்திலும் தெய்வம் நகைக்கிறார். பிரபஞ்சம் யாவும் சர்வேசுவரனுக்கு உரியவைகள்; அதை அறியாத மாந்தர் அதன் பகுதிகளில் உரிமை பாராட்டுகின்றனர்.

(தொடரும்)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

 

Advertisements

One thought on “Sri Paramahamsarin Apta Mozi – 66

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s