Thiruvembavai – 3

மார்கழி – 3

19.12.2015-சனி

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

னத்த னானந்த னமுதனென் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீ ரீசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

வெத்தோநின் னன்புடைமை யெல்லோ மறியோமோ

சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை

யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய்.


முத்து அன்னவெள் நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ஊறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்

பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர்

புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லாம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

அள்ளூறி – வாயூறி.

கடை திறவாய் – வாயிற் கதவைத் திறவாய்.

பத்து உடையீர் – பக்தி பூண்டிருப்பவர்களே.

பொல்லாதோ – கேடாய் முடியுமோ.

எத்தோ – ஏமாற்றமோ.

சித்தம் அழகியார் – மனபரிபாகம் உடையவர்கள்.


பொழிப்புரை:

முத்துப் போன்ற வெள்ளைப் பற்களையுடையவளே, எல்லார்க்கும் முன்னே வந்து எதிரில் எழுந்து நின்று என் தந்தை, ஆனந்தன், அமிர்த சொரூபி என்று வாயால் சொல்லி, வாயூற இனிய பேச்சுப் பேசுவாய். அத்தகைய நீ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். எழுந்து வந்து உன் வீட்டு வாயிலின் கதவைத் திறப்பாயாக.

அயர்ந்து உறங்கிய மாது மறுமொழி கூறுகின்றாள்: நீங்கள் பக்தி நிறைந்தவர்கள். ஈசனுக்கு நெடிது அடிமை பூண்டவர்கள். ஒழுங்குப்பாடு மிகவுடையவர்கள். நாங்களோ புதிதாக அடிமை பூண்டவர்கள். எங்கள் குறைபாட்டைப் பொருள்படுத்தாது எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால் ஏதாவது தீங்கு விளையுமோ?

வந்தவர்கள்: எங்களை ஏமாற்றப் பார்க்கின்றாயா? இறைவன்பால் நீ கொண்டுள்ள இணக்கத்தை நாங்கள் அறிந்திலமோ?

மனப்பரிபாகம் அடைந்துள்ள பக்திமதிகள் நம் சிவனைப் போற்றிப் பாடமாட்டார்களா? நமக்கிடையில் பரஸ்பர நட்பும், சிவ பக்தியும் பேரூக்கமும் தேவை. பாவை போன்ற பெண்ணே இக்கோட்பாடுகளை யெல்லாம் ஏற்றுக்கொள். அவைகளை எண்ணிப்பார்.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

சிவபக்திக்கு ஸத் சங்கமும் சிரத்தையும் இன்றியமையாதவைகள்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s