Thiruvembavai – 4

மார்கழி – 4

20.12.2015-ஞாயிறு

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

4

ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ

வெண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள

முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்

தெண்ணிக்குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.


ஒள் நித்திலம் நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணம் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக்கு ஒரு மருந்தை வேதம் விழுப் பொருளைக்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்

உள்நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

ஒள் நித்தில நகையாய் – ஒளியுள்ள முத்தைப் போன்ற பல் வரிசையுடையாள்.

வண்ணக்கிளி – அழகிய கிளி.

அவமே – வீணே.

மருந்தை – அமிர்தத்தை.

விழுப்பொருள் – வேதங்களால் சொல்லப்படுகிற மேலான பொருள்.


பொழிப்புரை:

வந்தவர்களுள் ஒருத்தி: ஒளியுள்ள முத்தைப் போன்ற பல் வரிசையுடையவளே, உனக்கு இன்னும் விடியவில்லையோ!

உறங்கிக்கொண்டிருந்தவள்: அழகிய கிளிமொழி போன்ற மொழியை யுடையவரெல்லாரும் வந்திருக்கிறார்களா?

வந்தவள்: எண்ணிக்கையெடுத்துப் பார்த்து உள்ளபடி சொல்லுகிறோம். அதற்கிடையில் நீ கண்ணுறங்கிக் காலத்தை வீணில் போக்காதே. விண்ணுலகத்தவர்க்கு ஒப்பற்ற அமிர்தமா யிருப்பவனை, வேதங்கள் போற்றுகிற மேலான பொருளை, ஞானக்கண்ணுக்கு விருந்தா யிருப்பவனைப் புகழ்ந்துபாடி மனம் குழைந்து, மனம் நெகிழ்ந்து நின்று உருகுவாயாக.

இவ்வேண்டுதலுக்குச் செவி சாய்க்காது உறங்கியவள் இன்னும் கொஞ்சம் உறங்கப் போனாள். அதைக் கவனித்தாள் வந்தவள். அவள் கூறுகின்றாள், நாங்கள் வந்திருப்பவர்களையெல்லாம் கணக்கெடுத்துக் காலத்தை விரயம் செய்யோம். நீயே வந்து கணக்கிட்டுப் பார்த்துக்கொள். கூடியிருப்பவரது எண்ணிக்கை குறையுமாயின் நீயும் சென்று சயனிக்கலாம். பாவை போன்ற பாங்கியே, செய்யத்தக்கது எது என்று சொல்லுவதை ஏற்றுக்கொள். பின்பு அதை எண்ணிப்பார்.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

தமோகுண விருத்தியுள்ள ஜீவாத்மன் வீண் காலம் போக்குதற்குச் சாக்குக் கண்டுபிடிக்கிறான். ஊக்கமுடையவர் அதற்கு உடந்தையாகார்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s