Thiruvembavai – 8

மார்கழி – 8

24.12.2015-வியாழன்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு

மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ

வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவா

யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ

வூழி முதல்வனாய் நின்ற வொருவனை

யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.


கோழி சிலம்பச் சிலம்பும் குருலகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெள்சங்கு எங்கும்

கேழ் இல் பரஞ்சோதி கேழ் இல் பரங்கருணை

கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

சிலம்ப – ஒலி செய்ய.

குருகு – பறவைகள்.

ஏழில் இயம்ப – ஏழிசை போன்று ஒலிக்க.

கேழ் இல் – ஒப்பு இல்லாத.

வாழி – நீ வாழ்வாயாக.

ஆழியான் – கருணை என்ற கடலை உடைத்திருப்பவன்.

ஏழை – பெண், உமாதேவி.


பொழிப்புரை:

கோழிகள் கூவுகின்றன; பறவைகள் ஒலித்து ஏழுவித இசை போல நாதம் செய்கின்றன; வெள்ளைச் சங்குகள் முழங்குகின்றன; உவமையில்லாத பரஞ்சோதி, உவமையில்லாத கருணை, உவமையில்லாத மேலாம் பொருள்-இத்தகைய சிவனை நாங்கள் பாடுகிறோம்-இவையாவையும் நீ கேட்கவில்லையோ? நீ வாழ்ந்திருப்பாயாக. இதுவும் ஓர் உறக்கமோ? இதைக் கொஞ்சம் எடுத்துச்சொல் கேட்போம். கருணைக் கடலாகிய சிவனிட்த்து அன்பு வைப்பது இம்முறையில் தானோ? பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்குகையில் எஞ்சியிருப்பவன் அவன் ஒருவனே. அவன் உமாதேவியின் சமேதன். அத்தகையவனது மகிமையைப் பாடுகிறோம். தோழி, நீ ஏற்றுக்கொள். ஓர்ந்து பார்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s