Thiruvembavai – 11

மார்கழி – 11

27.12.2015-ஞாயிறு

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

யையாவழியடியோம் வாழ்ந்தோங்கா ணாரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

வையாநீ யாட்கொண் டருளும் விளையாட்டி

னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ

மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய்.


மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி

ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல்

செய்யா வெள் நீறு ஆடி செல்வா சிறுமருங்குல்

மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா

ஐயா நீ ஆள்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

மொய் ஆர் – கூட்டம் நிறைந்த.

தடம்பொய்கை – அகன்ற தடாகம்.

முகேர் – நீர் இறைப்பதால் உண்டாகும் ஒலி.

குடைந்து குடைந்து – மூழ்கி மூழ்கி.

வழி அடியோம் – பரமபரை பக்தர்கள்.

ஆர் அழல்போல் – நிறைந்த நெருப்புப் போல.

செய்யா – சிவப்பு நிறமானவளே.

மருங்குல் – இடை.

ஐயா – அழகனே.

உய்ந்து ஒழிந்தோம் – உய்ந்தேவிட்டோம்.

எய்யாமல் – அருள் நாட்டத்தில் சோர்வடையாமல்.


பொழிப்புரை:

நீராடுதற்குக் கூடியுள்ள நாங்கள் நிறைந்ததும் அகன்றதுமான தடாகத்தில் இறங்கி, முகேர் என்னும் ஒலியுண்டுபண்ணிக் கொண்டு மூழ்கி மூழ்கி நீராடிவிட்டு உன் திருவடியைப் புகழ்ந்து பாடுகிறோம். அப்பனே! பரம்பரை பரம்பரையாக உன் அன்பர்களாகிய நாங்கள் உறுதியாக உன் அருளில் ஊறி வாழ்ந்து வருகிறோம். சுடர்விடுகிற தீப்போன்ற செம்மேனியனே, வெண்ணீறு பூசியவனே, மகிமை அனைத்துக்கும் இருப்பிடமே, ஒடுங்கிய இடையும் மை பூசிய அகன்ற கண்களும் உடைய உமாதேவியாரின் தலைவா, அழகனே, உயிர்களை ஆட்கொண்டருளுதல் உன் விளையாட்டாகும். அதன்படி நாங்கள் எல்லாரும் உறுதியாகவே உய்வு அடைந்திருக்கிறோம். உனது வழிபாட்டில் நாங்கள் தளர்வடையாமல் இருக்கும்படி காத்தருள்வாயாக. பெண்ணே இக்கருத்துக்களை ஏற்று ஓர்ந்து பார்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s