Thiruvembavai – 14

மார்கழி – 14

30.12.2015-புதன்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

யாதித் திறம்பாடி யந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.


காதுஆர் குழை ஆடப் பைம்பூண் கலன் ஆடக்

கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச்

சீதம்புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி

வேதம் பொருள் பாடி அப்பொருள் ஆமா பாடிச்

சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதித் திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்

பேதித்து நம்மை வளர்ந்த்து எடுத்தபெய்வளை தன்

பாதம் திறம்பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

குழை – தோடு.

கலன் – கலம், ஆபரணம்.

கோதை குழல் – பூமாலையை அணிந்த கூந்தல்.

வேதப் பொருள் – ஈசுவரன்.

தார் – பூமாலை.

பேதித்து – வேறுபடுத்தி.

பெய்வளைதன் – பராசக்தியின்


பொழிப்புரை:

காதில் அணிந்துள்ள தோடுகள் ஆடவும், பசும்பொன்னாலாகிய மற்ர ஆபரணங்கள் ஆடவும், பூமாலை பூண்டுள்ள கூந்தல் ஆடவும், அதை நாடி வந்துள்ள வண்டின் கூட்டம் ஆடவும் நாம் குளிர்ந்த நீரில் முழுகி நீராடுவோம். பின்பு சிற்றம்பலத்தானைப் போற்றுவோம். வேதம் அவனை விளக்குகிறது. நாம் அவனை அடைய வேண்டும். அவன் ஞான ஜோதிமயன். ஜடாபாரத்தில் அவன் கொன்றை மாலையை அணிந்திருக்கிறான். பிரபஞ்சத்துக்கு முன்பு இருந்தவனும் பின்பு இருப்பவனும் அவனே. நம்மைப் பிரபஞ்சத்தினிடத்திருந்து வேறுபடுத்திக் காப்பாற்றியருள்கிற அன்னை பராசக்தியின் மகிமையைப் பாடவும் ஆடவும் செய்வோமாக.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

நாம் சிவத்தோடு சேர்தலைத் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்ரு சம்பிரதாயங்களும் மூன்று முறைகளில் விளக்குகின்றன. ஜீவாத்மாவைப் பிரகிருதியினிடத்திருந்து பிரித்தெடுத்துப் பரம்பொருளோடு சேர்ப்பது பராசக்தியின் சீரிய செயலாம்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s