Thiruvembavai – 17

மார்கழி – 17

02.01.2016-சனி

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

17

செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா

லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

யங்க ணரசை யடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கமப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


செங்கண் அவன் பால் திசைமுகன் பால் தேவர்கள்பால்

எங்கும் இலாத்து ஓர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நம் தம்மைக் கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி

செம் கமலம் பொன்பாதம் தந்து அருளும் சேவகனை

அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்

பங்கயம் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

செங்கணவன் (செங்கண்ணவன்) – திருமால்.

திசைமுகன் – பிரம்மா.

கொங்கு உண் – மணம் தங்கிய.

கோதாட்டி – குற்றம் நீக்கி.

சேவகனை – செயற்கரிய செயலைச் செய்பவனை.

அம்கண் – கருணையினால் அழகிய கண்.

பங்கயப்பூம்புனல் – தாமரைகள் நிறைந்த நீர்.


பொழிப்புரை:

இயல்பாகவே மணம் தங்கிய கரிய கூந்தலையுடையவளே, விஷ்ணு, பிரம்மா முதலிய தேவர்களிடத்து இல்லாத பேரின்பம் நமக்கு யாண்டும் சொந்தம். நம் குற்றங்கள் களையப்பெறும்பொழுது அது அனுபூதி யாகிறது. அதற்காக இறைவன் நம் வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். செந்தாமரை போன்ற தனது பொற்பாதத்தை நமக்குக் கொடுத்தருளும் சேவகன் அவன். கருணை நிறைந்த கண்களையுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நமக்கு அவன் நிறையமிர்தம். சிவஞானம் என்னும் நலம் அவனிடத்திருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமையைப் பாடுவோம். இக்கோட்பாடுகளை யெல்லாம் தோழி, ஏற்று ஓர்ந்து பார்.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

பக்தியும் ஞானமும் ஈண்டு ஒன்றித்து ஒளிர்கின்றன. அக்ஞானம் என்னும் குற்றம் அகலுமிடத்து ஜீவன் சிவ சொரூபம் என்பது தெளிவாகிறது. மேலும் தானே ஸத்-சித்-ஆனந்தம் என்பது முடிந்த அனுபூதி.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s