Sri Paramahamsarin Apta Mozi – 70

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 70

 

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 69: https://swamichidbhavananda.wordpress.com/2015/12/31/sri-paramahamsarin-apta-mozi-69/)

எது கர்மயோகம்?

ஈசுவர சந்திர வித்யாசாகரைப் பார்த்துப் பரமஹம்ஸர் பகர்கின்றார்: “நீங்கள் ஆற்றி வரும் வினைகள் அனைத்தையும் கையாண்டு வரலாம். அவைகளில் குற்றம் ஒன்றுமில்லை. உண்மையில் அவைகள் பாராட்டத்தக்க செயல்களேயாம். ஆனால் அவைகளைச் செய்வதற்கிடையில் உங்களுடைய மனப்பான்மை அறவே மாறிவிட வேண்டும். ஆற்றுகின்ற கர்மத்துக்குக் கர்த்தா நீங்கள் என்கின்ற எண்ணம் அகன்றுவிடவேண்டும். கடவுள் ஒருவரே கர்த்தா. அவர் கையில் இருக்கும் கருவி நாம். அவர் ஆட்டுவித்தவிதம் நாம் ஆடுகிறோம். கருவியாகிய நம்மைக் கொண்டு அவர் விரும்புகிற கர்மங்களைச் செய்துகொள்ளட்டும். முற்றிலும் அவரிடத்துக் கருவியாய் இருப்பதே நம் கடன். இந்த எண்ணத்தில் ஊறியிருப்பீர்களானால் அது மிக நன்று. அதன் மூலம் பக்தி மேன்மேலும் வளர்கிறது. இறுதியில் பக்தன் இறைவனை அடைந்துவிடுகிறான்.

உலகக் கடமைகள் எப்போது நழுவுகின்றன?

“கடவுள் பக்தி அதிகரிக்குமளவு ஏனைய கடமைகள் தாமாகக் குறைந்துபோய் விடுகின்றன. அத்தகைய கடமைகளில் பக்தன் ஒருவனுக்குச் சுவையும் ஏற்படுவதில்லை. கடவுள் மீது அவன் கொண்டுள்ள பேரன்பில் ஏனைய கடமைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. மணாட்டுப் பெண் ஒருத்தி மாமியார் வீட்டுக்கு வருகின்றாள். புதிதாக வந்துள்ள அவளுக்கு அலுவல்கள் பல தரப்படுகின்றன. அவைகளையெல்லாம் அவள் செய்து முடிக்க வேண்டும். நாளடைவில் அவள் கர்ப்பிணி ஆகின்றாள். பின்பு மாதங்கள் அதிகரிக்குமளவு அவளுக்கு வேலை குறைந்துபோய்விடுகிறது. நிறை கர்ப்பிணியாய் இருக்கும்பொழுது எல்லா வேலைகளும் அவளிடத்திருந்து நீக்கப்படுகின்றன. அப்பொழுது அவள் பணியாற்றி வந்தால் வயிற்றிலிருக்கும் குழவிக்குக் கேடு ஏதேனும் வந்துவிடலாம். அல்லது பிரசவமாவதே கஷ்டமானதாய்விடலாம். இதையெல்லாம் முன்னிட்டு அவளிடத்திருந்து எல்லாக் கடமைகளும் அகற்றப்படுகின்றன.

பக்தனுடைய பாங்கு அத்தகையது. அவனுடைய உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்குமளவு உலகக் கடமைகள் அவனிடத்திருந்து நீக்கப்படுகின்றன. கடவுளின் திருவடியில் மாறாத அன்பைச் செலுத்திக் கொண்டிருப்பதே அவனுடைய முடிவான குறிக்கோள் ஆய்விடுகிறது.”

(தொடரும்…)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

One thought on “Sri Paramahamsarin Apta Mozi – 70

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s