Thiruppalliyezuchi – 6

மார்கழி 26

11.01.2016 – திங்கள்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருப்பள்ளியெழுச்சி

6

பப்பற வீட்டிருந் துணருநின் னடியார்

பந்தனை வந்தறுத் தாரவர் பலரு

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின் றாரணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

யிப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியு

மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.


பப்புஅற வீடு இருந்து உணரும் நின் அடியார்

பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்

மைப்புஉறு கண்ணியர் மானுடத்து இயல்பின்

வணங்குகின்றார் அணங்கின் மணவாளா

செப்புஉறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


அருஞ்சொற்பொருள்:

பப்பு – பதைபதைப்பு.

வீடு இருந்து – விடுதல் அல்லது துறவில் இருந்து.

பந்தனை – பிறவிப்பிணி.

மைப்புஉறு – மைத்தன்மை பொருந்திய.

அணங்கின் – தெய்வப்பெண் ஆகிய உமாதேவியின்.

செப்பு – சிவப்பு.


பொழிப்புரை:

உமாபதே, மனம் ஒடுங்கி, உலகப்பற்று ஒழிந்து வீடுபேறு அடையப்பெற்றவர்க்கு வழிபாடு வேண்டியதில்லை. ஆனால் அன்னவரும் உன்னை வழுத்துதலில் இன்பம் காண்பதற்குப் பெண் இயல்பாகிய பதிநாட்டத்தை விடாது பிடித்து வைத்திருக்கின்றனர். பிறவிக் கடலினின்று என்னை ஆட்கொள்பவனே பள்ளி எழுந்தருளாய்.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

பக்திரஸத்தில் ஈடுபடுதற்காகவே ரிஷிபுங்கவர்கள் பிருந்தாவனத்தில் கோபிமார்களாக வந்து அவதரித்தார்கள் என்பது ஐதிகம்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s