Sri Paramahamsarin Apta Mozi-74

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 74

Apta mozi

(முந்தைய பகுதி-மொழி 73: https://swamichidbhavananda.wordpress.com/2016/01/28/sri-paramahamsarin-apta-mozi-73/)

சாதன நிலையும் சமாதி நிலையும்

“புஷ்பத்துக்கு அருகில் போகும் தேனீ புஷ்பத்தைச் சுற்றி ரீங்காரமிடுகிறது. இப்படி ரீங்காரமிடும் செயல் எவ்வளவு காலம் நிகழ்கிறது? ஈ புஷ்பத்தின் மீது உட்கார்ந்து அதிலுள்ள தேனை அருந்த ஆரம்பிக்கும் வரையிலும் அதன் சப்தம் கேட்கிறது. தேனை அருந்த ஆரம்பித்ததும் சப்தம் நின்றுவிடுகிறது. அதே பாங்கில் சமாதி நிலை அடைந்ததும் ஒருவனுக்கு உலகக் கிருத்தியங்கள் தாமாக நின்றுவிடுகின்றன.

ஆனால் இன்னும் சாதன தசையில் இருக்கும் ஒருவன் தன்னுடைய கடமைகளையெல்லாம் நிறுத்திவிடலாகாது. ஊக்கத்துடன் அவைகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். கடவுளின் கைங்கரியமாகக் கருதி அவன் அவைகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. ஆராதனை, வந்தன, வழிபாடு, ஜபம், தியானம், பஜனை, ஸ்தோத்திரம் ஆகியவைகளை அவன் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

சமாதி நிலையில் பரம்பொருளைச் சாக்ஷாத்கரித்தான பிறகு ஒருவன் அப்பரம்பொருளைக் குறித்துப் பொதுவாகச் சம்வாதம் செய்வதில்லை. ஏதேனும் ஞானி ஒருவர் அப்படிச் சம்வாதம் ஏதாவது செய்வாராகில் அதில் வியப்பொன்றுமில்லை. தேனை அருந்திக்கொண்டிருப்பதற்கிடையில் சிற்சில வேளைகளின் தேனீ இலேசாக ரீங்காரம் செய்வதுண்டு. இந்த ஞானியின் செயல் அத்தகையது. தாம் பாரமார்த்திகப் பெருநிலையில் மூழ்கியிருப்பதற்கிடையில் அதைக் குறித்துச் சில வார்த்தைகளையும் வெளியிட அவர் முற்படுகின்றார்.”

அன்று காலையிலிருந்து மாலைவரையில் இடையிடையே பாடகர் பக்திரசம் ததும்பிய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். அதைக் குறித்துப் பரமஹம்ஸருக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. தாம் திருப்தியுற்றிருந்ததாகவும் அவர் காட்டிக்கொண்டார். ஒரு விஷயத்தை அவர் இயம்பினார்:

“ஒரு மனிதனிடத்து ஆனந்த பரவசமாகப் பாடுவது போன்ற சிற்றியல்பு ஏதேனும் இருக்குமானால் அதைச் சாமான்யமாகக் கருதலாகாது. கடவுளின் அனுக்கிரஹத்தாலேயே அது ஏற்பட்டுள்ளதென்று எண்ண வேண்டும். யாருக்குக் கடவுளின் கிருபை கிடைக்கின்றதோ அவருக்குச் சிறப்பியல்பு ஏதாவது ஒன்று அமைந்துவிடுவதுண்டு. ஈசுவர விபூதியே அம்மனிதனிடத்து அத்தகைய சிறப்பியல்பாக விளங்குகிறது.”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s