The Garland of Paraparam – 2

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக் கண்ணி

கண்ணி – 2:

கண்ணாரக் கண்டோர் கருப்பொருள் காணாமல் அருள்

விண்ணூடு இருந்தஇன்ப வெற்பே பராபரமே.

  • கருப்பொருள் – பிறவிக்கூறு.
  • வெற்பு – மலை.

விளக்கம்:

அதீதத்திலிருக்கும் பரம்பொருளே, நீ யாண்டும் அசையாது இருக்கிறாய். வெற்பு அல்லது மலையைச் சான்றாக வைத்துக்கொண்டே உன் பெருமையைக் கிரகிக்க வேண்டும். மலைக்கு அசலம் என்று பெயர். எக்காரணத்தை முன்னிட்டும் அது அசைவதில்லை. அது போன்று நீ அசையாப் பொருள். மேலும் உன்னை ஆனந்தகிரி எனல் வேண்டும். ஜீவர்களின் ஆனந்தம் அசையும் தன்மையது. உனது ஆனந்தமோ யாண்டும் அகண்டாகாரமாய் இருந்து வருகிறது. நீ சிதாகாசம். ஆதலால் விண் என்னும் அடைமொழி உனக்கே பொருந்தும். உயிர்களை ஓம்புவதால் நீ அருட்பெரு வெளியாகின்றாய். இத்தகைய பெருமை வாய்ந்த நீ வெறும் கற்பனை வஸ்து அல்லன். அனுபூதியில் ஆன்றோர்கள் உன்னை அறிந்துள்ளனர். ஆதலால் அவர்கள் கண்ணாரக் கண்டோர் எனப் போற்றப்படுகின்றனர். உன்னை அனுபூதியில் அறிகின்றவர்களுக்குப் பிறவிப் பெருங்கடல் பொருளற்றதாகிறது. ஆதலால் அன்னவர்கள் கருப்பொருள் காணாதார் ஆகின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன்னை உன்னி உன்னி உய்தல் வேண்டும்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse: 2

கண்ணாரக் கண்டோர் கருப்பொருள் காணாமலருள்

விண்ணூடு இருந்தஇன்ப வெற்பே பராபரமே

kaNNArak kaNdOr karupporuL kANAmalaruL

viNNUdu iruntha inba verpE parAparamE.


Thou art the Mountain of Bliss

That standeth in the spaces vast of Grace.

They who saw it full well

Saw no more birth to be,

Oh Para Param!

Hymns by

KaviyogiSuddhananda Bharathi

Translation:

As a Paraaparam you are the mountain of bliss enjoyed by the realized souls transcending birth and residing in the realm of grace.

-Swami Chidbhavananda.


Previous post:

https://swamichidbhavananda.wordpress.com/2016/02/10/the-garland-of-paraparam-1/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s