Sri Paramahamsarin Apta Mozi-78

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 78

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 77: https://swamichidbhavananda.wordpress.com/2016/02/25/sri-paramahamsarin-apta-mozi-77/)

நுண்ணிய ஆணவ மலம்

ஈசுவரசந்திர வித்யாசாகரை இன்னும் சில தடவைகள் சந்தித்தால் நல்லது. வித்யாசாகரிடம் மனபரிபாகத்தின் அறிகுறிகள் பல தென்படுகின்றன. ஆயினும் ஒரு சிறிய குறைபாடு அவரிடம் தென்படுகின்றது. ஆணவ மலம் ஒரு சிறிது அவருடைய சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. அது நீங்கப் பெற்றால் அவர் சிறந்த சத் புருஷன் ஆவார். பரோபகாரச் செயல்கள் பலவற்றை அவர் புரிந்து வருகின்றார். அவர் அங்ஙனம் செய்வது முற்றிலும் பாராட்டத்தக்கது. ஆனால் தம் உள்ளிருக்கும் பரம்பொருளை அவர் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. அதைச் சிறிதேனும் அவர் அறிவாராகில் வெளியுலக விஷயங்களில் அவர் கொண்டுள்ள மனவிருத்திகளெல்லாம் பெரிதும் நின்றுவிடும். அந்தச் சிறந்த செயல்களுக்குத் தாம் கர்த்தா என்கின்ற எண்ணமும் அறவே நின்றுபோய்விடும். பூமிக்குள் பொன் மறைந்து கிடப்பது போன்று அவர் உள்ளத்தில் பாரமார்த்திக இயல்பு வேண்டியவாறு இருக்கிறது. அதன்கண் அவர் இன்னும் கருத்தைச் செலுத்தாது இருக்கிறார். அதை அவர் உணர்வாராகில் வெளியில் உள்ள வியவகாரங்களில் செல்லும் அவருடைய மனதில் பெரும் பகுதி பாரமார்த்திக நாட்டத்தில் உள்முகமாகத் திரும்பிவிடும். அப்படித் திரும்புங்கால் பூரண பக்குவ நிலைக்கு அவர் விரைவில் வந்துவிடுவார்.

ஓவியம் வரைகின்றவன் முதலில் கோடுகள் கிழிக்கின்ற பாங்கில் வடிவத்தை அமைக்கின்றான்; பிறகு அதற்குச் சிறிது சிறிதாக நிறங்களைத் தீட்டுகிறான்; நுண்ணிய பகுதிகளை வரைந்து அமைக்கின்றான். ஓவியம் பூர்த்தியாகுங்காலை மிகமிக நுண்ணிய பகுதிகளை ஓவியக்காரன் ஜாக்கிரதையாக வரைகின்றான்.

தேவதைகளின் விக்கிரகங்களைக் களிமண்ணால் செய்கின்ற சிற்பியும் அதற்கேற்ற முறைகளைக் கையாளுகின்றான். முதலில் மரக்குச்சிகள் சிலவற்றை ஒரு பலகையின்மீது பொருத்தி வைக்கின்றான். அவைகளின் மீது வைக்கோலைக் கொண்டு ஒருவிதட்தில் வடிவம் வந்து அமையும்படி கட்டுகிறான். பிறகு அதன்மீது களிமண்ணைப் பூசி நல்ல வடிவத்தை உண்டு பண்ணிவிடுகிறான். அதை நயப்படுத்துதல் அடுத்த முயற்சி. பின்பு அவ்வடிவம் முழுதுக்கும் ஒரே வெள்ளை நிறம் பூசப்படுகிறது. அதன் பேரில் அந்தந்த அங்கத்துக்குரிய நிறம் முதலியவைகள் தீட்டப்படுகின்றன. இங்ஙனம் படிப்படியாகத் தெய்வத்தின் பதுமை அமைக்கப் பெறுகிறது.

Ishwar_Chandra_Vidyasagar
ஈசுவரசந்திர வித்யாசாகர்

ஈசுவரசந்திர வித்யாசாகருடைய அமைப்பில் பெரும்பகுதி இங்ஙனம் ஆயத்தமாய்விட்டது. கடைசிப் பகுதி இன்னும் பாக்கியிருக்கிறது. ஆதம் சாதனங்கள் சில புரிவது அவர் போன்றவர்களுக்கு முற்றிலும் அவசியமாகிறது. புறவுலகில் இவ்வளவு கருத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றவர் சிறிது ஆத்ம சாதனமும் செய்து பார்த்தால் தம் உள்ளிருக்கும் பெரிய பொருள் எது என்பதை அறிந்துகொள்வார். அதை அறிந்துகொள்ளாதவர்களுக்குப் புறவுலக அலுவல்கள் எவ்வளவு பெரியவைகளாய் இருந்தாலும் அவைகள் அனர்த்தமாய்ப் போய்விடுகின்றன. வெறுமனே நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பவனாக ஒரு மனிதன் இருந்தால் போதாது. ஆத்ம சாதனத்தில் சிறிதளவாவது நல்லான் ஒருவன் ஈடுபட்டாக வேண்டும். தன் அமைப்பு முழுதும் கடவுளுக்கு உகந்த ஆலயம் என்பதை நல்லியல்பு படைத்த மனிதன் ஒருவன் அனுபூதியில் அறிந்துகொள்வது அவசியமாகிறது. அப்பொழுது அவன் வாழ்வு நிறைவாழ்வு ஆகிறது.

“ஆயுட்கால முழுவதும் ஆதம் சாதனம் செய்வது ஆவசியமா?” என்று மஹேந்திரர் பரமஹம்ஸரிடம் விண்ணப்பித்தார்.

ஆரம்ப தசையில் ஒருவன் ஆழ்ந்து ஆத்ம சாதனங்களில் ஈடுபட்டாக வேண்டும் என்று பரமஹம்ஸர் பதில் விடுத்தார். பின்பு ஒருவன் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. படகு ஒன்றைப் படகோட்டி செலுத்துகின்றான். பெரிய அலைகளையும், புயல் காற்றையும் எதிர்த்து அவன் செல்லவேண்டி வருகிறது. அப்பொழுது அவன் துடுப்புகளையும், சுக்கானையும் தீவிரமாகக் கையாளுகின்றான். சற்று நேரத்திற்குப் பிறகு அத்தகைய இடைஞ்சல்களிலிருந்து அவன் மீண்டுவிடுகின்றான். அவனுக்கு அனுகூலமான காற்றும் வீச ஆரம்பிக்கிறது. அப்பொழுது அவன் பாயை விரித்துக் கட்டுகிறான். சுக்கானை இலேசாகக் கையில் பிடித்துக்கொண்டு அவன் ஓய்வு எடுக்க ஆரம்பிக்கின்றான். படகு தானாக மேல்நோக்கி ஓடுகிறது. ஆத்ம சாதகன் ஒருவனுடைய நிலையும் இத்தகையது. காமம், காசு ஆசை என்ற புயல் காற்றுகள் முதலில் வீசி அவனைத் துன்புறுத்துகின்றன. அவைகளினின்று தான் மீளுதற்பொருட்டுச் சாதகன் தீவிரமான சாதனங்கள் செய்தாக வேண்டும். இறைவனுடைய நாமஜபம், பிரார்த்தனை, தியானம் முதலியவைகளில் மனதை அவன் ஆழ்ந்து செலுத்த வேண்டும். மன அமைதி பெற்றான பிறகு அவன் அவ்வளவு தீவிரமான முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவன் பெற்றுள்ள நல்ல இயல்பு குறியின்கண் அவனைத் தானாகவே எடுத்துச் செல்கிறது.

(தொடரும்.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s