Question & Answer – 3

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 3: ஆன்மிகத்தின் பயன் என்ன?

பதில்:

உலகச் செயல்கள் எல்லாம் பயன் கருதி செய்யப்படுகின்றன. உலகச் செயல்களைப் பயன் கருதாது பகவான் பொருட்டுச் செய்யும்பொழுது அது ஆன்மிகம் எனப்படும். உலகப்பற்றை வளர்ப்பது உலகாயதம். உலகக் காரியங்களைப் பற்றுடன் செய்தால் அவை உலகப்பற்றை வளர்த்துத் துன்பத்துக்கும், மயக்கத்துக்கும் நம்மை ஆளாக்குகின்றன.

ஆன்மா என்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் அப்பால் உள்ளது. ஆன்மா பொறி புலன்களுக்கு எட்டாதது. அது மனதுக்கு அப்பாற்பட்டது. புலன் நுகர்ச்சியைக் கடந்து அருள் உணர்ச்சியை மனதில் உண்டாக்கும்பொழுதுதான் ஆன்ம தரிசனம் கிடைக்கும். ஆன்ம தரிசனம் பெறுவதைத்தான் ஆன்மிகம் என்கின்றோம். ஆன்மிகம் ஒப்பற்ற உயர்ந்த நிலையாகும். ஆன்மிகத்துக்கு மேல் உயர்ந்த நிலை இல்லை. உயர்வற உயர்நலத்தை நல்குவது ஆன்மிகம். ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்ற நிலையை ஆன்மிகத்தால் பெறலாம். ஆன்மிக வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை எதுவும் இருக்க முடியாது. பேரறிவையும், பேரின்பத்தையும், பேராற்றலையும் ஆன்மிகத்தின் மூலம் பெறலாம். சாந்தி, அடக்கம், அமைதி, அருள்நிலை ஆகியவற்றை ஆன்மிகம் நல்குகின்றது. ஆன்மிக வாழ்வு வாழ்கின்றவன் அழியாப் பெருவாழ்வை அடைகின்றான். மரணமிலாப் பெருவாழ்வு அவனுக்கே சொந்தம். ஆன்மிக வாழ்வு வாழ்பவன் ஆசைக்கு அடிமைப்படுவதில்லை. சிற்றியல்பையும், சிற்றுணர்வையும் கடந்து பேரியல்பையும் பேருணர்வையும் பெறும் தெய்வீக மனிதனாக ஆன்மிக வாழ்வு வாழ்பவன் மாறி அமைகின்றான்.

எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடுகின்றன. உண்மையான இன்பத்தைப் பெறாது போலி இன்பத்தைப் பெற்று அதுதான் இன்பம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் ஆன்மிக இன்பமேயாகும். ஆன்மிக வாழ்வின் மூலம்தான் உண்மையான பேரின்பத்தைப் பெற முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ஜடசக்தியை நன்கு பயன்படுத்திப் பிரபஞ்ச வாழ்வை வசதி நிறைந்த வாழ்வாக இன்று அமைத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மேநாட்டினர் சிறந்து விளங்குகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியடைந்துள்ள மேநாட்டினர் நிம்மதியான வாழ்வு எங்கு கிடைக்கும் என அலைந்து திரிகின்றனர். நிம்மதியான வாழ்வுக்காக இந்தியாவை நாடி வருகின்றனர். ஆன்மிகத்தின் மூலம்தான் சாந்தியையும், நிம்மதியையும் பெற முடியும் என்பதை மிகப் பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s