Question & Answer – 4

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 4: ஆன்மா, மெய்யறிவு, ஆன்மிகம் இவற்றிற்குரிய விளக்கம் யாது?

பதில்:

பச்சைநிறக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பவனுக்கு எல்லாப் பொருள்களும் பச்சையாகத் தோன்றும். சிவப்புநிறக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பவனுக்கு எல்லாம் சிவப்பு நிறமாகத் தோன்றும். கண்ணாடியினுடைய வர்ணத்திற்கு ஏற்பப் பொருள்களிடத்து வர்ணத்தைக் காண்கின்றான். உண்மையில் இவன் காண்கின்ற வர்ணம் இவன் அணிந்துள்ள கண்ணாடியில் இருக்கிறதே தவிர இவன் காண்கின்ற பொருள்களிடத்து இல்லை. ஆனால் வர்ணக் கண்ணாடியை அணிந்திருப்பவன் தான் காண்கின்ற வர்ணம் பொருள்களிடத்து இருப்பதாக உணர்கின்றான். அணிந்திருக்கின்ற வர்ணக் கண்ணாடியை எடுத்துவிட்டு நிறமற்ற கண்ணாடியை அணிவானானால் பொருள்களிடத்து நிறத்தைக் காணமாட்டான். மனம் என்னும் கண்ணாடியைக் கொண்டுதான் நாம் உலகைக் காண்கின்றோம். ஆகையால் மனத்திலுள்ள உபாதிகளுக்கு ஏற்பப் பொருள்கள் நமக்குக் காட்சி தருகின்றன. மனிதன் என்னும் உபாதியை மனதிலிருந்து அகற்றிவிட்டால் நாம் மனிதனைக் காணமாட்டோம். ஆணாகத் தென்படுவதும், பெண்ணாகத் தென்படுவதும் ஒரே பொருள். இன்னும் பெண்ணிடத்து மனம் பல வேற்றுமைகளைக் காண்கிறது. ஒரு பெண்ணை ஒரு மனம் மனைவியாகக் காண்கிறது. அதே பெண்ணை மற்றொரு மனம் தாயாகக் காண்கிறது. அதே பெண்ணை மற்றொரு மனம் மகளாகக் காண்கிறது. ஓர் ஆணை ஒரு மனம் கணவனாகக் காண்கிறது. அதே ஆணை மற்றொரு மனம் தந்தையாகக் காண்கிறது. அதே ஆணை மற்றொரு மனம் மகனாகக் காண்கிறது. இத்தனை காட்சிகளும் மனதிலுள்ள உபாதிகளேயாம். மனதில் உள்ள உபாதிகளை அகற்றும்பொழுது இக்காட்சிகள் எல்லாம் மறைந்துபோய்விடும். அப்பொழுது உலகில் ஒரே ஒரு பொருளைத்தான் காண்கின்றோம். அந்தப் பொருளுக்குத்தான் ஆத்மா என்று பெயர். இந்த ஆத்மாதான் உண்மையில் இருக்கிறது. இந்த ஆத்மாவை அறிகின்ற அறிவுக்குத்தான் மெய்யறிவு என்று பெயர்.

மனதில் உள்ள உபாதிகளை அகற்றுவதற்குரிய ஒழுக்கமான வாழ்வும் விவேக வைராக்கியத்துடன் கூடிய வாழ்வும் ஆன்மிகம் எனப்படுகிறது. ஆத்மாவை அறிவதற்குரிய ஆன்மிக வாழ்விலிருந்து ஆத்மாவை அறியும் மெய்யறிவு உண்டாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s