THE GARLAND OF PARAPARAM – 9

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக் கண்ணி

கண்ணி – 9

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே

சித்தேஎன் உள்ளத் தெளிவே பராபரமே.

விளக்கம்:

முத்தும் பவளமும் நீரினுள் உருவெடுக்கின்ற செல்வங்களாகின்றன. பொன் நிலத்தினின்று எடுக்கின்ற செல்வமாகிறது. ‘மொய்த்தல்’ என்னும் சொல்லுக்குக் ‘கொடுத்தல்’ என்பது அர்த்தம். மண்ணினின்று எடுத்த பொன்னுக்குப் பளபளப்பைத்தர மனிதனுக்கு இயலுகிறது. ‘சித்’ என்னும் சொல் அறிவு சொரூபமாகிய ஆன்மாவைக் குறிக்கிறது. மானுட சரீரத்தில் நீர்த் தத்துவம், நிலத் தத்துவம் ஆகிய இரண்டு பூதங்களும் முக்கியமான இடம் பெறுகின்றன. அத்தகைய மானுட உடலினின்று சித் அல்லது அறிவுப் பொருளாகிய ஒப்பற்ற செல்வத்தைத் தோற்றுவிக்க மனிதனுக்கு இயலுகிறது. “உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்” என்பது ஆப்த வாக்கியம். கட்புலனாகாத ஆத்மாவானது கட்புலனாகின்ற முத்து, பவளம், பசுஞ்சுடர் நிறைந்த பொன் ஆகியவைகளோடு ஒப்பிடப்படுகிறது. ஆத்மபோதம் ஓங்குதற்கு ஏற்ப உள்ளத்தெளிவு அதிகரிக்கிறது. ஜீவர்களுக்கிடையில் உள்ள வேற்றுமை, மனத்தெளிவை அடிப்படையாகக் கொண்டது. மனம் தெளிவடைவதற்கேற்ப ஜீவன் மேல்நிலையடைகிறான். முற்றிலும் தெளிந்த நிலையில் ஜீவன் சிவசொரூபம் ஆகின்றான். தோன்றா நிலையிலிருந்து தோன்றியுள்ள நிலைக்கு ஆத்மபோதம் உயர்வது இக்கண்ணியில் அடங்கியிருக்கிறது.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 9:

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே

சித்தேஎன் உள்ளத் தெளிவே பராபரமே.

muththE pavaLamE moyththapasum poRchudarE

chiththEyen uLLath theLivE parAparamE


Thou art the limpid perception of my heart.

Thou art the pearl, the coral, the pure shining gold.

Thou art the Cit – Divine Intelligence

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Revered Paraaparam, you are the pearl, the coral and the ever available shining gold, you are the clarified conscience in my heart.

-Swami Chidbhavananda.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s