Sri Paramahamsarin Apta Mozi – 83

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 83

Apta mozi

 

(சென்ற வாரத்தின் தொடர்ச்சி. முதலில் முந்தைய பகுதியை வாசித்துவிட்டு பின்பு இதனை வாசிக்கலாம். மொழி 82: https://swamichidbhavananda.wordpress.com/2016/04/07/sri-paramahamsarin-apta-mozi-82/)

கர்மம் செய், கர்த்திருத்துவம் வேண்டாம்

மஹேந்திரர் மேலும் வினவுகின்றார்:

“ஐயனே இப்பொழுது எனக்கு இருக்கும் வருவாயை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளுதற்கு நான் பிரயத்தனம் எடுத்துக்கொள்ளலாமா? அப்படிப் பிரயத்தனம் எடுத்துக் கொள்ளுவது ஆத்ம சாதனத்துக்கு உடன்படுவதாகுமா?”

பரமஹம்ஸரிடமிருந்து விடை வருகிறது:

“குடும்பத்தில் இருப்பவர்களெல்லாம் கடவுளிடத்துப் பக்தி பண்ணக் கடமைப்பட்டிருக்கின்றனர். கடவுள் பக்தியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தாரைச் சம்ரக்ஷிப்பது குடும்பத் தலைவனின் கடமை. பக்திமான்கள் நிறைந்துள்ள குடும்பத்தைப் பரிபாலிப்பதற்காகக் குடும்பத் தலைவன் அதிகப்படியாகப் பணத்தைச் சம்பாதிக்கலாம். அப்படிச் சம்பாதிக்க முயலுகின்றவன் அதை நேர்மையான வழியிலேயே தேட வேண்டும். பல பேர் பணம் சம்பாதிப்பதையே வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணியிருக்கின்றனர். அத்தகையவர்கள் மானுடப் பிறவியின் லட்சியத்தை அறியாதவர்கள். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அன்று; கடவுளைச் சாக்ஷாத்கரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள். ஆனால் பணம் இல்லாது மனிதன் உலகில் வாழ்ந்திருக்க முடியாது. மனிதன் தன் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றி வைப்பதன் பொருட்டு நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கலாம். அதில் கருத்துச் செலுத்துவதைவிட அதிகமாகக் கடவுள் வழிபாட்டிலே கருத்தைச் செலுத்த வேண்டும். சம்பாதித்த பணத்தை ஈசுவர கைங்கரியமாகப் பயன்படுத்திவர ஒருவன் தெரிந்துகொள்வானாகில் அத்தகையவனுக்குப் பணம் ஒரு தீங்கும் செய்துவிடாது. நல்வழியில் பணத்தைச் சம்பாதிப்பதே ஒரு புருஷார்த்தமாகிறது. பின்பு அதை நல்ல காரியங்களில் செலவிட்டுக் கொண்டிருப்பதும் அவசியம். அப்படிச் செய்பவனே மனிதருள் மேலோன் ஆகிறான்.

(தொடரும்…)

Tamil new year

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s