Question & Answer – 6

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 6: புத்தர் பரப்பிய மதத்திற்குப் புத்த மதம் என்றும், மகமது பரப்பிய மதத்திற்கு மகமதிய மதம் என்றும் பெயர் வந்துள்ளன. ஹிந்து மதம் என்று பெயர் வரக் காரணம் என்ன? விளக்கியருள வேண்டுகிறேன்.

பதில்:

உலகிலுள்ள பல மதங்கள் அந்தந்த மத ஸ்தாபகர்களுடைய பெயரால் அமைந்தவைகள். மதங்களுள் மிகப் பழையது ஹிந்துமதம். ஆனால் பழங்காலத்தில் அதற்கு ஒரு பெயரும் கிடையாது. நாளடைவில் அது சனாதனதர்மம் என்னும் பெயர் பெற்றது. எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கை நெறி என்பது அதன் பொருள். நாளடைவில் இந்தியாவுக்குள் வேறு பல மதங்கள் வந்த பிறகு இந்தத் தாய் மதத்துக்கு ஹிந்துமதம் என்னும் பெயர் வந்தது. இந்தியாவில் தோன்றி இந்தியாவிலே இருப்பதால் இதற்கு இப்பெயர் அமைந்துள்ளது. இப்பழைய மதத்தின் விளக்கத்துக்குப் பல பெரியார்கள் தொண்டு புரிந்திருக்கின்றனர். ஆனால் அப்பெரியார்களுடைய பெயரை அடிப்படையாகக் கொண்டு ஹிந்துமதம் உருவெடுத்ததன்று. தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு அது உருவெடுத்துள்ளது. ஆகையினால்தான் அதற்கு அமைந்துள்ள பெயரும் சனாதனதர்மம் என்னும் பொதுப்பெயராகும். கணிதத்தில் இந்தியர்களுடைய கணிதம் என்றும், அயல் நாட்டவர்களுடைய கணிதம் என்றும் வேறுபாடு இல்லை. கணிதத்தில் வல்லவர் எத்தனை பேர் அந்த சாஸ்திரத்தைப் பெருக்கினாலும் அது கணித சாஸ்திரம் என்றே பெயர் பெற்றுள்ளது. இந்தியப் பெருமக்கள் எத்தனையோ பேர் சனாதனதர்மத்தை வளர்த்து அதற்கு விளக்கம் கொடுத்தனர். அப்படி இருந்தும் அது சனாதனதர்மம் என்றே பெயர் பெற்றுள்ளது. அவதார புருஷர்கள், ரிஷிகள், ஞானிகள், யோகிகள், பக்தர்கள் கணக்கற்றபேர் ஹிந்துமதத்துக்கு உரியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களுடைய ஜீவிதங்களும், போதனைகளும் ஹிந்துமதத்துக்குப் பேராதரவு தந்து வருகின்றன. ஆயினும் மனிதனை முன்னணியில் வைக்காது தத்துவங்களை முன்னணியில் வைப்பதே ஹிந்துமதத்தின் போக்கு. அதனால்தான் எல்லா மதங்களுக்கிடையில் சமரசம் காண்பது ஹிந்துமதத்துக்கு மிக எளியதாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s