Question & Answer – 7

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 7: தர்ம சக்கரம், விஜய வருடம் பங்குனி இதழில் 85வது பக்கத்தில் अहं ब्रह्मास्मि  என்று பகரலாகாது எனக் கண்டிக்கிறது. ஒரு வருஷத்துக்கு முன்பு இவ்விடம் வந்திருந்த ரிஷிகேஷ் ஸ்ரீ மஹேசுவரானந்த மஹராஜ் அவர்கள் நான்கு மஹா வாக்கியங்களைத் தினந்தோறும் துயிலெழும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் தியானிக்க வேண்டியது என்று சொன்னார்கள். அந்நான்கு மஹா வாக்கியங்களாவன:

1. प्रज्ञानं ब्रह्म  2. अयमात्मा ब्रह्म 3. तत्वमसि  4. अहं ब्रह्मास्मि

பிரக்ஞானம் பிரஹ்ம, அயம் ஆத்மா பிரஹ்ம, தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி – இவ்விதமாகத் தினந்தோறும் செய்து வருகிறேன். நான் செய்வது சரியா?

பதில்:

தேகாத்ம புத்தியுடைய ஒருவன் சரீரத்தைத் தான் என்று உணர்கிறான். சரீர உணர்வைக் கடந்த நிலை ஒன்று உண்டு. தலைவலி படைத்தவன் தலையைப் பற்றியே நினைக்கிறான். அந்நோய்க்கு ஆளாகாதவன் தன்னிடத்துள்ள அங்கங்களில் சிறந்தது தலை எனினும் அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை. அதே பாங்கில் சீரிய மனநிலையை அடைந்தவர்கள் உடலை உடைத்திருந்தும் உடல் உணர்வு கொள்ளாது இருக்கின்றனர். நம்மைச் சார்ந்திருக்கும் நிழலை நாம் பொருள்படுத்தாது இருக்கிறோம். மனபரிபாகம் அடைந்தவர்கள் அங்ஙனம் உடல் உணர்வு கொள்ளாதிருக்கின்றனர். அத்தகையவர்கள் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் மஹா வாக்கியத்தை ஓதி அக்கருத்தில் நிலைபெற்றிருக்க அருகதை உடையவர்கள். அதனால் அவர்கள் மேல்நிலைக்குப் போய்க்கொண்டே இருக்கின்றனர். ஆனால் உடல் உணர்வில் கட்டுண்டு கிடப்பவர்கள் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் வாக்கியத்தை ஓதுவதால் ஒரு நன்மையும் அடைந்துவிடமாட்டார்கள். ‘நாராயணா’ என்றும் ‘சிவ சிவ’ என்றும் கிளிப்பிள்ளை சொல்லிக்கொண்டிருக்கும். பூனையைக் கண்டதும் ‘கர் கர்’ என்று கத்தும். உடல் உணர்வில் கட்டுண்டிருப்பவர்கள் மஹா வாக்கியம் ஓதிக் கொண்டிருப்பதற்கிடையில் கடவுள் நாமத்தை ஓதும் கிளியின் நிலையில்தான் இருக்கிறார்கள். தேகாத்ம புத்தி உடைத்திருப்பவர்கள் சோஹம், சிவோஹம் என்று சொல்லுதற்குப் பதிலாகத் தாஸோகம் என்று சொல்லுவது மிக நன்று என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எச்சரிக்கை செய்திருக்கிறார். உடல் உணர்வு இருக்கும் பரியந்தம் தன்னைப் பிரம்ம சொரூபம் என்று எண்ணுதற்குப் பதிலாகக் கடவுளின் தொண்டன் என்று எண்ணிக் கொள்வது மிகச் சிறந்தது. அதனால் அந்த சாதகனுக்கு எல்லா நன்மையும் உண்டாகிறது என்பது அதன் கருத்து. நான் கடவுளின் குழந்தை, நான் கடவுளின் தொண்டன் – இவை போன்ற கருத்துக்கள் எல்லார்க்கும் பயன்படும். மஹாவாக்கியத்தின் கோட்பாடோ உயர்ந்த நிலைக்குப் போனவர்களுக்கு மட்டும் பயன்படும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s