THE GARLAND OF PARAPARAM – 16

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 16:

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே

விளக்கம்:

உடைந்த மட்பாண்டத்தை ஓடு என்கிறோம். அது ஒன்றுக்கும் உதவாது. ஈண்டு இருநிதி என்பது பெரிய திரவியம். வெள்ளி, தங்கம், இரத்தின வகைகள் இருநிதி எனப்படுகின்றன. நகைகள் பண்ண அவைகள் உதவுகின்றன. நாணயம் பண்ணுவதற்கும் வெள்ளியும், பொன்னும் பயன்படுகின்றன. நகைகளையும் நாணயங்களையும் வேண்டும்பொழுதெல்லாம் புதுப்பிக்கலாம். ஆயினும் மூலகாரணமாய் இருக்கிற அந்த நிதிக்கு மதிப்புப் போவதில்லை. ஆதலால் உலகத்தவர் ஓட்டைப் புறக்கணிக்கவும், இருநிதியைப் பாராட்டவும் செய்கின்றனர். ஆனால் ஞானிகளின் காட்சி வேறானது. பரம்பொருளை அனுபூதியில் கண்டவர்கள் ஞானிகள். பரம்பொருளின் திருக்காட்சி அடையப் பெற்றவர்க்குப் பிரபஞ்சத்தின் காட்சி மாறியமைகிறது. ஓட்டுக்கும், பொன்னுக்குமிடையில் அவர்கள் உயர்வு தாழ்வு காண்பதில்லை. பரம்பொருளே பிரபஞ்சமாகக் காட்சி கொடுக்கிறது. ஜடம், சேதனம் என்று சொல்லப்படுபவைகள் யாவும் சின்மயமாக மிளிர்கின்றன. சின்மயமாக மிளிரும் பரவஸ்துவினிடத்தில் ஞானிகள் பேரன்பு வைக்கின்றனர். அப்பரவஸ்துவானது ஈண்டு நட்பு என்று பாராட்டப்படுகிறது. அகம், புறம் ஆகிய எங்குமே சித்சொரூபத்தைப் பரஞானிகள் காண்கின்றனர். மெய்ப்பொருள் ஒன்றே யாவுமாய் மிளிர்கிறது. அம்மெய்ப்பொருளிடத்து ஞானியர்கள் பேரன்பு வைத்து அம்மெய்ப்பொருள் மயமாய் மிளிர்கின்றனர்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 16:

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே.

Odum irunidiyum onRAgak kaNdavargaL

nAdum pOruLAna natpE parAparamE


Thou art the Harmony in truth sought

By those who equable held

The potsherd and precious treasures,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Praiseworthy Paraaparam, you are the favourite treasure of those who behold a broken bit of pitcher and treasure with indifference.

-Swami Chidbhavananda.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s