Sri Paramahamsarin Apta Mozi – 90

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 90

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 89:

https://swamichidbhavananda.wordpress.com/2016/05/26/sri-paramahamsarin-apta-mozi-89/)

மறைத்தலின் மகிமை

இப்படிப் பரமஹம்ஸர் பகர்ந்து கொண்டிருந்தபொழுது மஹேந்திரருடைய உள்ளத்தில் ஐயம் ஒன்று உதித்தது. “கடவுள் தம்மை எதற்காக மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்? அடியார்க்கு எளியவனாக அவர் தமது காட்சியைச் சந்ததமும் கொடுத்துக் கொண்டிருக்கலாமே” என்று அவர் எண்ணினார்.

இப்படி அவர் எண்ணியதும் பரமஹம்ஸரிடமிருந்து அவருடைய ஐயத்துக்கு விடை வந்தது:

“கடவுளை நாடிப் பக்தன் சிறிது அலைந்து திரிய வேண்டும் என்பதுதான் ஈசனுடைய நியமம். அப்படி நாம் சிறிது அலைந்து திரியாவிட்டால் அதில் சுவை ஒன்றுமில்லை. எதை வருந்திப் பெறுகின்றோமோ அது நமக்கு இனியதாகிறது. எதை நாம் எளிதில் பெற்றுவிடுகின்றோமோ அது மதிப்பற்றதாகப் போய்விடுகின்றது. இப்பிரபஞ்சத்தின் அமைப்பில் ஆத்ம சாதகன் ஒருவன் கடவுளை நாடி அலைந்து திரிய வேண்டுமென்கின்ற ஏற்பாடு அமைந்திருக்கிறது. நாம் அதை அங்கீகரித்தாக வேண்டும். இப்பிரபஞ்சத்தையும், அதிலுள்ள விதவிதமான நியமனங்களையும் கடவுள் அற்புதமாக அமைத்திருக்கின்றார். இதை அவருடைய திருவிளையாடல் என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டுக்கு முடிவும் கிடையாது. இந்த விளையாட்டின் ஒரு பகுதி உயிர்களை மோகமடையச் செய்தல் என்பதாம். உயிர்களை மோகமடைய செய்யாவிட்டால் உலக நடைமுறையே சுவையற்றதாய்ப் போய்விடும். ஜகன்மோகினி என்று அன்னை பராசக்தி அழைக்கப்படுகின்றாள். உயிர்களெல்லாம் கடவுளின் உண்மை சொரூபத்தை அறிந்துகொள்ளாது இருக்கிறார்கள். அத்தகைய அறியாமையே இந்த உலக நடைமுறை என்னும் விளையாட்டுக்குச் சோபை தந்துகொண்டிருக்கிறது. மயக்கம் அல்லது மோகம் என்னும் வலையில் நம்மைக் கட்டி வைத்திருப்பவள் அன்னை பராசக்தி. அந்த மோகத்திலிருந்து நம்மை விடுவிப்பவளும் அதே அருள் அன்னை. நாம் ஜகன் மாதாவிடம் சரண்புகுந்து அவளால் ஆதரிக்கப் பெற வேண்டும் என்று பரிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படிப் பிரார்த்தனை பண்ணுமிடத்து அவள் அருளால் மோகவலை அகன்றுபோய்விடுகின்றது. எல்லாம் அன்னையின் சொரூபம் என்னும் அனுபூதி அதன் பிறகு நமக்கு உண்டாகிறது.”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s