V V S Iyer Rememberance Day Article – 2014/Part 2

(இங்கு பதிவேற்றப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை 2014ஆம் வருடம் கீழ்கண்ட முகவரியில் பதிவேற்றப்பட்டிருந்தது:

ஜூன் 4:-

வ.வே.சு. ஐயர் நினைவு தின சிறப்புப் பகிர்வு – 2

VVS Iyer 4

[ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் மறைந்த குலபதி சுவாமி நித்தியானந்தர் அவர்கள் எழுதியிருக்கும் ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’ என்னும் நூலில் வ.வே.சு. ஐயர் பற்றி காணக்கிடைக்கும் செய்திகள்.]

1924ஆம் ஆண்டு தம் குருநாதர் ‘மகாபுருஷ மஹராஜ்’ சுவாமி சிவானந்தரின் அனுமதியையும் ஆசியையும் பெற்றுக்கொண்டு திரையம்பக சைதன்யர் (சுவாமி சித்பவானந்தர் பிரம்மச்சாரியாக இருந்தபோது வழங்கப்பட்ட பெயர்) தென்னாட்டில் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின்பொழுது இரயில் பிரயாணம் செய்த ஒருவர் திரையம்பக சைதன்யரிடம் நட்புகொண்டார். அந்த சக பிரயாணியானவர் இளைஞராகவும், தீரராகவும், கல்வியில் ஆர்வமுடையவராகவும் தென்பட்ட திரையம்பகசைதன்யரிடம், தேசபக்தர்-தீரர் வ.வே.சு ஐயர் அவர்களைப்பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். வ.வே.சு. ஐயர் அவர்கள் சிறந்த கர்மயோகியாகவும், தவச்சீலராகவும் விளங்கினார். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் சேரன்மகாதேவியில் பரத்வாஜ ஆஸ்ரமம் நடாத்தி வந்தார். சைதன்யர் வ.வே.சு. ஐயரிடம் சென்று அவரைத் தரிசித்து இன்புற்றார். சைதன்யருக்குப் பொதுத்தொண்டில் இருந்த ஆர்வத்தையும், தியாக உள்ளத்தையும் ஐயர் அவர்கள் பார்த்துப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

தனிமையில் இருந்து தவம் செய்து தம்முடைய ஆன்மீகச் சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று தமது உள்ளத்தில் இருந்த விருப்பத்தை ஐயர் அவர்களிடம் சைதன்யர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் என்னும் இடம் அதற்கேற்றது என்று ஐயர் அவர்கள் கூறினார். ஐயர் அவர்கள் கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களை நுணுக்கமாக ஆராய்ந்தவர். மகாகவி சுப்ரமணிய பாரதி மற்றும் அரவிந்தர் முதலானோர் ஐயர் அவர்தம் நண்பர்கள். ஐயர் அவர்கள் இளைஞர்களிடையே விடுதலைக் கனலை மூட்டியவர். அவருடைய அன்பினாலும், பண்பினாலும் ஈர்க்கப்பட்டு 3 நாட்கள் பாரத்வாஜ ஆஸ்ரமத்தில் தங்கி ஆன்மவிசாரம் செய்தார் சைதன்யர்.

பின்னர் ஐயர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாபநாசத்துக்குச் சென்றார். பாபநாசம் இயற்கை எழில் மிகுந்ததாக அமைந்திருந்தது. அகஸ்தியர் வழிபட்ட சிவலிங்கம் பாபநாச மலைச்சாரலில் அமைந்திருந்தது. ஆங்கு ஒரு குடில் இருந்தது. அக்குடிலில் தங்கி பாபநாச தீர்த்தத்தில் நீராடி, சிவனை பூஜித்து இரண்டு மாத காலம் தவ வாழ்வு வாழ்ந்தார். எளிய உணவைத் தாமே சமைத்து உண்டு வந்தார்.

திரையம்பகசைதன்யர் பாபநாசத்தில் தவம் புரிந்து வந்தபொழுது வ.வே.சு. ஐயர் ஒரு நாள் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருவி ஸ்நானத்துக்காக அங்கு வந்தார். தம்முடைய துளசி மாலை, துணி மணிகள் ஆகியவற்றைத் திரையம்பக சைதன்யர் அவர்கள் அறையில் வைத்துவிட்டுப் பாபநாச அருவிக்கு மேலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளிக்கும்பொழுது அவர் மகளை நீர் அடித்துக்கொண்டு போயிற்று. மகளின் உயிரைக் காப்பாற்றச் சென்ற ஐயர் அவர்களும் மகளுடன் சேர்ந்து அருவி நீரில் மூழ்கிவிட்டார். திருவருள் சித்தப்படி இந்த நிகழ்ச்சி நிகழ்ந்தது என்பது பிற்காலத்தில் திரையம்பகசைதன்யருக்கு விளங்கிற்று.

தீவிர தேசாபிமானி திரு. வ.வே.சுப்பிரமணிய ஐயர் 1923ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி என்னும் இடத்தில் பாரத்வாஜ ஆஸ்ரமம் ஏற்படுத்தினார். 1925ஆம் ஆண்டில் அந்த ஆஸ்ரத்தின் நிர்வாகமானது மகாத்மா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் டிரஸ்டிகள் யாவரும் அந்த ஸ்தாபனத்தை 1984ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் குலபதியாக இருந்த காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்திடம் ஒப்படைத்தனர். பிறகு தபோவனம் அதைத் தன் கிளைஸ்தாபனங்களில் ஒன்றாக ஏற்று நடாத்தி வருகிறது. ஆன்மீகத்துறையில் தேசத்தொண்டுக்கு ஆயத்தப்படுத்தும் முறையில் மாணவர்கள் அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

VVS Iuer 3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s