Sri Paramahamsarin Apta Mozi – 91

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி 91

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 90:

 https://swamichidbhavananda.wordpress.com/2016/06/02/sri-paramahamsarin-apta-mozi-90/ )

சக்தியின் அனுக்ரஹம்

பரமஹம்ஸர் மேலும் பகர்வாராயினர்:

“பிரம்மமும் மாயையும் ஒன்றே. வேறு ஒரு பாங்கில் சொல்லுமிடத்துச் சிவமும், சக்தியும் ஒன்றே. சிவம் அல்லது பிரம்மத்தை அறிய விரும்புகிறவர்கள் சக்தியின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டும். சக்தியின் அனுக்ரஹத்தாலன்றிக் கடவுளை அறிந்துகொள்ள நம்மால் இயலாது. உலக முழுதையும் மோகம் என்னும் மயக்கத்திலே பராசக்தி மறைத்து வைத்திருக்கின்றாள். உயிர்களெல்லாம் மோகத்தில் மயங்கிக் கிடப்பதாலேயே உலக நடைமுறை என்னும் விளையாட்டு நிகழ்ந்து வருகின்றது. அன்னையிடம் பரிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ‘ஜகன்மோகினியாகிய தாயே! இந்தப் பிரபஞ்ச சொரூபமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்ற நீ உன்னுடைய உண்மையான சொரூபத்தை எனக்குக் காட்டியருள வேண்டும்.’ இந்த பாங்கில் சக்தி உபாசனை செய்தால்தான் சக்தியினுடைய அனுக்ரஹத்தை நாம் பெற முடியும். ஒரு வீட்டினுடைய வெளிப்பகுதிகளையே நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். வீட்டுக்குத் தலைவியாய் இருப்பவள் தாய். இந்தப் பிரபஞ்சம் என்னும் வீட்டின் புறத்தோற்றங்களைத்தான் இப்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். தாயினிடம் வினயத்தோடு வேண்டிக்கொண்டால் வீட்டின் உட்பகுதியில் செல்லுதற்கு அவள் அனுமதி கொடுக்கின்றாள். உள்ளே சென்று பார்த்தால் அகண்ட சச்சிதானந்தம் இருப்பதைக் காண்போம். அந்த அகண்ட சச்சிதானந்தத்தின் வெறும் தோற்றங்களாய் இவ்வுலகிலுள்ள பொருள்களெல்லாம் அமைந்திருக்கின்றன. உள்ளே சென்று சச்சிதானந்தத்தை உணர்ந்தால் அந்த ஒரு பொருளே பிரம்மமாகவும் மாயையாகவும் இருக்கிறதென்றும், அல்லது சிவமாகவும், சக்தியாகவும் இருக்கிறதென்றும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.  அந்த ஞானத்தைப் பெறுதற்கு அன்னையினிடம் சரண்புகுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

தங்களுடைய மயக்கங்களை மாற்றியமைக்க வேண்டுமென்று நான்முகக் கடவுளாகிய பிரம்மதேவன் முதலாயினோர் அம்பிகையினிடத்துப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அம்பிகையின் அருளால் பிரம்மதேவன் முதலாயினோர்க்கு மது, கைடபன் என்கின்ற அரக்கர்களை அழிக்க இயன்றது. மனத்தகத்து இருக்கும் மயக்கமும், அக்ஞானமும் இத்தகைய அசுரர்களென வடிவெடுத்திருக்கின்றன. அக்ஞானமே வடிவெடுத்துள்ள அசுரர்களை அகற்றுதற்கு அம்பிகையின் அனுக்ரஹம் உற்ற துணையாக இருக்கிறது.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s