Question & Answer – 14

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 14: மனம் என்னும் சொல்லால் எது குறிக்கப்படுகிறது?

பதில்: பழம் ஒன்றைக் கடையில் வாங்குகிறோம். ஆனால் வாங்கியபடி உண்பதற்கு அதை உபயோகப்படுத்துவதில்லை. புறத்திலிருக்கும் தோலை அப்புறப்படுத்துகிறோம். சுளையை உண்பதற்கு வைத்துக்கொள்ளுகிறோம். சுளைக்கும் மேல் தோலுக்கும் இடைநிலையில் பழத்தின் அம்சம் ஒன்று உண்டு.  அந்த அம்சத்தை வேண்டுமானால் உண்ணலாம். வேண்டாமென்றால் புறக்கணித்துவிடலாம். பழத்துக்கு நிகர் மனிதன். அதன் உள்ளிருக்கும் சுளைக்கு நிகர் ஆத்மா. புறத்தில் இருக்கும் தோல் போன்றது உடல். இடையில் உள்ள வஸ்துவுக்கு நிகர் மனது. புறத்தில் ஜட உடலோடும், அகத்தில் ஆத்மாவோடும் அது மாறி மாறி இணையவல்லது. உடலோடு சேர்ந்திருக்கிறபொழுது அது ஜடப்பொருள். ஆத்மாவோடு சேர்ந்திருக்கிறபொழுது அதற்கு உணரும் தன்மை வருகிறது. இன்ப துன்பங்களை எது உணருகிறதோ அது உள்ளம் அல்லது மனம். வாழ்வையும் மரணத்தையும் எது கருத்தில் வாங்குகிறதோ அது மனம்.

கோட்டை ஒன்றுக்கு வெளிப்பக்கம் அகழி இருக்கிறது. அதைத்தாண்டி வெளியே வருவதற்கு மடக்குப் பாலம் ஒன்றிருக்கிறது. அந்த மடக்குப் பாலத்தை உள்ளே திருப்பிக் கொண்டால் வெளி உலகுக்கும், கோட்டைக்கும் தொடர்பு ஒன்றும் இல்லாது போய்விடுகிறது. அந்த மடக்குப் பாலத்துக்கு நிகர் மனம். அதன் துணைகொண்டே மனிதன் புறவுலகைப் பொருள்படுத்துகிறான். அப்படி அவன் பொருள்படுத்துதற்கு உபகரணமாகப் பஞ்சேந்திரியங்கள் அமைந்திருக்கின்றன. பஞ்சேந்திரியங்கள் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்து விதங்களில் புறவுலகம் பொருள்படுத்தப்படுகிறது. இந்த ஐந்து விதங்களில் பொருள்படுத்தாவிட்டால், புறவுலகம் இருந்தும் பொருள்படுத்தாத மனிதனுக்கு அது இல்லாது போய்விடுவதற்கு நிகராகிறது. மனது ஐம்பொறிகளோடு சேருமிடத்தே அவைகளின் தொழில் பூர்த்தியாகிறது. நாவால் சுவைக்கிறோம். அப்படிச் சுவைப்பதற்கிடையில் மனது நாவோடு பொருந்தியிராவிட்டால் சுவைத்தது இன்னதென்று தெரிவதில்லை. காதோடு மனம் பொருந்தியிராவிட்டால் கேட்டது இன்னதென்று விளங்குவதில்லை. ஐம்பொறிகளுக்கும் அதிபதியாயிருந்து அவைகளின் செயல்களைப் பொருள்படுத்துவது எதுவோ அது மனது. மனம் செயலற்றுப் போகுமிடத்துப் புறவுலகே காட்சியினின்று மறைகிறது. இங்ஙனம் உள்ளும், புறமும் இருப்பவைகளை எது பொருள்படுத்துகிறதோ அது மனது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s