THE GARLAND OF PARAPARAM – 18

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 18:

போதாந்த புண்ணியர்கள் போற்றி சயபோற்றியெனும்

வேதாந்த வீட்டின் விளக்கே பராபரமே.

விளக்கம்:

உணர்ச்சியோடு செய்கின்ர செயல்களுக்குப் போதம் என்னும் பெயர் வந்துள்ளது. ஆனால் போதம் என்பது பெரிதும் சூட்சும சரீரமாகிய மனத்துக்குள்ளேயே நிகழ்கின்ற நிகழ்ச்சியாம். போதாந்தம் என்பது மனத்தின் உணர்ச்சிக்கு அப்பால் உள்ள நிலை. போதத்தின் அந்தம் போதாந்தம் எனப்படுகிறது. தீ சுடர்விட்டு எரிவதற்கு நிகர் மனத்தின் போதம். தீ எரிந்து ஓய்ந்து போவதற்கு நிகர் போதாந்தம். மனதற்றநிலை போதாந்தம் எனப்படுகிறது. மனோநாசம் அமையப் பெற்றவர்களெல்லாம் புண்ணியாத்மாக்களாம். இறைவனைக் குறித்து அப்பெருமக்கள் ‘போற்றி! ஜய போற்றி!’ என்று வாழ்த்துவது மனத்தின் கடைசிச் செயல் ஆகிறது. மனோ நாசம் உண்டுபண்ணுவதற்குக் கடவுள் வழிபாடே உற்ற உபாயமாகின்றது.

வேதம் என்பது அறிவுமயமாய் இருக்கின்ற ஜீவாத்மனையும், ஜகத்தையும் குறிக்கின்றது. ஜகத்தையும் ஜீவனையும் பொருள்படுத்துவது மனது. மனதற்ற நிலை போதாந்தம். ஜகத்தும், ஜீவனும் வேத சொரூபமாய் இருப்பதால் அவை இரண்டும் ஒடுங்கியநிலை வேதாந்தம். வேதத்தின் அந்தமே வேதாந்தம் எனப்படுகிறது. பரவஸ்துவிற்குப் போதாந்தம் என்பதும் வேதாந்தம் என்பதும் அடைமொழிகளாம். பரவஸ்து வீடு என்றும் ஞானவிளக்கு என்றும் போற்றப்படுகிறது.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 18:

போதாந்த புண்ணியர்கள் போற்றி சயபோற்றியெனும்

வேதாந்த வீட்டின் விளக்கே பராபரமே.

bOthAntha puNNiyargaL pORRi sayapORRiyenum

vEdanta vIttin viLakkE parAparamE

Thou art the Lamp in the House of Vedanta

Which the holy beings of bodhanta

Hail in victory resounding,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Paraaparam is the luminosity in the house of Vedanta adored by the holy ones who have transcended the senses.

-Swami Chidbhavananda.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s