Sri Paramahamsarin Apta Mozi – 92

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 92

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 91: https://swamichidbhavananda.wordpress.com/2016/06/09/sri-paramahamsarin-apta-mozi-91/)

சக்தியின் இரண்டு அம்சங்கள்

அன்னை பராசக்தியே அனைத்துக்கும் மூலகாரணமாகின்றாள். ஆதலால் அவளுக்கு மூலப்பிரகிருதி என்று பெயர். அவளிடத்திருந்தே அனைத்தும் தோன்றி வந்திருக்கின்றன. இந்த மாயா சக்தியிடம் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. வித்யா மாயை என்பது ஓர் அம்சம். அவித்யா மாயை என்பது மற்றொரு அம்சம். உலகில் உள்ளவர்களில் பெரும்பாலோர் அவித்யா மாயையின் வசப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவித்யா மாயையில் கட்டுண்டிருப்பவர்களுக்குக் காமமும், பொருளாசையும் பெருமிதமாய் உண்டாகின்றன. இந்த ஆசைக்கு வசப்பட்டே அவர்கள் பிறவிகள் பல எடுக்கின்றனர். ஆசைகளை நிறைவேற்றி வைப்பதற்கே அவர்கள் ஓயாது உழன்று கொண்டிருக்கின்றனர்.ஓர் ஆசை நிறைவேறப் பெறுதற்கு முன்பு மற்றோர் ஆசை உருவெடுத்துவிடுகிறது. கடலில் அலைகள் வந்து கொண்டிருப்பது போன்று எண்ணிறந்த ஆசைகள் மனதில் உதித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அவித்யா மாயையை அகற்றுதற்கு வித்யா மாயையினுடைய உதவி வேண்டும். பக்தி, வைராக்கியம், விவேகம், தயை முதலியன வித்யா மாயையினுடைய வடிவங்கள் ஆகின்றன. அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பெற விரும்புகின்றவர்கள் அவித்யா சொரூபமாக இருக்கின்ற அவளை முதலில் போற்ற வேண்டும். ‘காம சொரூபமாக இருக்கின்ற தாயே, என் மனத்தகத்து நல்ல காமங்கள் உண்டாகட்டும். பற்றுதல் சொரூபமாக இருக்கின்ற தாயே, என் மனத்தகத்து நல்லவைகளிடத்துப் பற்றுதல் உண்டாகுக. துக்க சொரூபமாக இருக்கின்ற தாயே, உன்னுடைய அருளுக்கு நான் இன்னும் பாத்திரமாகவில்லையே என்னும் துக்கம் உண்டாகட்டும். நித்திரை சொரூபமாக இருக்கின்ற தாயே உலகப் பொருள்களிடத்துப் பற்று வைக்காத நித்திரை நிலை எனக்கு வந்துவிடட்டும்.’ இப்படியெல்லாம் அவித்யா சொரூபமாக இருக்கின்ற அன்னையைப் பிரார்த்திக்க வேண்டும். அப்படி செய்வதால் நம்முடைய கீழான இயல்புகள் மேலான இயல்புகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகு பக்தியும், ஞானமும் வடிவெடுப்பது மிக எளிதாய்விடுகிறது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s