Question & Answer – 16

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 16: சங்கரர், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்றார். இராமானுஜரோ பரமாத்மா உடையவன், ஜீவாத்மா உடைமை என்றார். இதில் எது உண்மை?

பதில்: இக்கேள்விக்கு விடைசொல்ல வருமிடத்து மத்வாச்சாரியாருடைய கொள்கையையும் இதனோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

madhvacharya
ஸ்ரீ மத்வாச்சாரியார்

மத்வாச்சாரியார் கொள்கைப்படி ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. இக்கொள்கைக்கு த்வைதம் என்று பெயர்.

Ramanujacharya
ஸ்ரீ ராமானுஜாச்சாரியார்

இராமானுஜாச்சாரியார் கொள்கைப்படி ஜீவாத்மன் பரமாத்மாவுக்கு உறுப்பு அல்லது அவயவம் அல்லது மேனி ஆகிறது. இக்கொள்கைக்கு விசிஷ்டாத்வைதம் என்று பெயர்.

shankaracharya_new
ஸ்ரீ சங்கராச்சாரியார்

சங்கராச்சாரியார் கொள்கைப்படி ஜீவாத்மன் என்பது கற்பனையாக உண்டுபண்ணிக்கொண்ட தனி வியக்தியாம். தன்னை ஜீவன் என்று சொல்லுகின்ற பொழுதும் ஜீவன் பரமாத்மாவுக்குப் புறம்பானதன்று. இக்கொள்கைக்கு அத்வைதம் என்று பெயர்.

இம்மூன்று கொள்கைகளும் உண்மையே.

அக்ஞானத்தில் இருக்கிறபொழுது ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. ஏகதேசம் ஞானம் பெற்றிருக்கிற பொழுது ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம். நிறைஞானத்தில் ஜீவன் இல்லை, பரமாத்மாவே யாண்டும் உள்ளது.

கடலில் எண்ணிறந்த அலைகள் இருக்கின்றன. ஆங்ஙனம் பிரபஞ்சத்தில் கணக்கற்ற ஜீவர்கள் இருக்கிறார்கள். யானை என்னும் ஜீவன் குதிரை என்னும் ஜீவன் ஆகாது.

அலைகள் அனைத்தும் கடலின் அம்சங்கள். கடலுக்குப் புறம்பாக அவைகள் இருக்க முடியாது. இது விசிஷ்டாத்வைதம்.

அலைகளுக்குத் துவக்கம் உண்டு, முடிவு உண்டு. ஆனால் கடல் நீர் எப்பொழுதும் இருக்கிறது. நாம ரூபத்துக்குப் புறம்பாக அலைகள் இல்லை. அங்ஙனம் நாமரூபத்துக்குப் புறம்பாக ஜீவன் இல்லை. இதுவே அத்வைதம் எனப்படுகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலைகளைச் சொன்னவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். ஒவ்வொரு துறையிலும் அத்வைத நிலைக்கு வரும் வரையிலும் ஆனந்தம் கிடையாது. ஐக்கியப்படுத்திக் கொண்ட பின்புதான் முழுமையான ஆனந்தம் கிடைக்கும். இதற்கு சுவாமிஜி சொல்லும் கதை:- வழிப்போக்கன் ஒருவன் சாப்பாடு கட்டிக்கொண்டு போகிறான். அப்போது அவன் வேறு உணவு வேறு; அது த்வைதம். பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து உணவைச் சாப்பிடுகிறான். இப்போது உணவு அவனுக்குள் இருக்கிறது; ஜீரணமாகி அவன்மயம் ஆகவில்லை எனினும் அவனுக்குள் இருக்கிறது; இது விசிஷ்டாத்வைதம். உணவு ஜீரணமாகி அவனோடு கலந்துவிடுகிறது; இது அத்வைதம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s