THE GARLAND OF PARAPARAM – 20

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 20:

ஈனம் தரும்உடலம் என்னதுயான் என்பதற

ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே.

விளக்கம்:

அலந்தேன் – துன்பப்பட்டேன்.

மனிதன் உண்மையில் ஆத்ம சொரூபம். அக்ஞானத்தால் அவன் வினையை வளர்த்தான். வினையின் விளைவாக உடல் உண்டாயிற்று. அந்த உடலே சிறுமைகள் அனைத்திற்கும் இருப்பிடமாயிற்று. அணு உடலில் ஜீவபோதத்தைத் துவக்கி மானுட உடல் எடுக்கும் வரையில் அவ்வுடலைத் தான் என்றும் தனது என்றும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் வளர்த்து ஜீவாத்மன் எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானான். அவ்வத்துன்பங்களின் வாயிலக அவன் அடைந்துள்ள நலனும் ஒன்றுண்டு. சிற்றுயிர் மயமாக இருந்த உடலை பேருயிர் மயமான உடலாக உயர்த்துதற்கு அகங்காரமும், மமகாரமும் பயன்பட்டன. தான் அல்லாத உடலைத் தான் என்று கருதுவது அகங்காரம். தன்னுடையன அல்லாத உலகப் பொருள்களைத் தன்னுடையவைகளாகக் கருதுவது மமகாரம். ஜீவன் எடுத்த எண்ணிறந்த உடல்களின் வாயில்களாக மின்னல் போன்று அப்போதைக்கப்போது சிறிது ஆனந்தத்தை அனுபவித்தான். ஆனந்தம் இம்மியளவென்றால் துன்பம் மலையளவு மிகப் பெரியதாம். பகுத்தறிவு படைத்த மனிதன் ஆன பிறகு விவேகத்தால் அகங்காரத்தையும், மமகாரத்தையும் ஒழித்தல் வேண்டும். அப்பொழுது பேரானந்தம் தானாக நிலை பெற்றிருக்கிறது. பரம்பொருளே! அத்தகைய பேரானந்தத்தை நாடி நிற்கின்றேன்.

-ஸ்ரீமத் சுவாமி  சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 20:

ஈனம் தரும்உடலம் என்னதுயான் என்பதற

ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே.

Inam tharum udalam ennathuyAn enbadaRa

Anantham vEndi alanthEn parAparamE.

In distress I sought

The Bliss that cometh of ending

The attachment to this carnal body

As I and mine,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Lord Paraaparam, I languish for the bliss obtained when identification with the demeaning body is relinquished.

-Swami Chidbhavananda.


 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s