Sri Paramahamsarin Apta Mozi – 93

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 93

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 91: https://swamichidbhavananda.wordpress.com/2016/06/23/sri-paramahamsarin-apta-mozi-92/)

பக்தரிடம் பரமஹம்ஸர் காட்டிய பிரியம்

புரட்டாசி மாதத்தில் ஒரு திங்கட்கிழமையன்று பக்தர்கள் பலர் தட்சிணேசுவரத்துக்கு வந்து பரமஹம்ஸ தேவருடைய அறையில் புடைசூழ்ந்தனர். துர்க்கா பூஜை நிகழ்தற்கு இன்னும் சில தினங்கள் பாக்கி இருந்தன. பரமஹம்ஸர் பேரானந்தத்தில் மூழ்கியவராக இருந்தார். அதற்கேற்ற காரணமும் ஒன்று இருந்தது. ஆங்கு வந்து கூடிய பக்தர்களுள் அவருடைய பேரன்புக்குரிய நரேந்திரரும் ஒருவர். அவர் தம்முடன் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்திருந்த யுவர்கள் இரண்டு மூன்று பேரை அழைத்து வந்திருந்தார். இவரைத் தவிரப் பரமஹம்ஸ தேவரின் ஞானச் செல்வராகிய ராக்காலும் ஆங்கு வந்திருந்தார். அவர் ஆனந்தமுற்றிருக்க அதுவும் ஒரு காரணமாகும்.

இனி ராம்லால், ஹஸ்ரா, மகேந்திரர் முதலாயினோரும் ஆங்கு வந்திருந்தனர். அன்று நரேந்திரர் நண்பகல் உணவை பரமஹம்ஸ தேவருடன் ஏற்கலானார். எல்லாரும் போஜனம் பண்ணின பிறகு அவர்களெல்லாரும் ஓய்வு எடுத்துக் கொள்ளுதற்குப் பரமஹம்ஸருடைய அறையிலும் அதைச் சுற்றி இருந்த திண்ணைகளிலும் சில பாய்கள் விரிக்கப்பெற்றிருந்தன. நரேந்திரருக்கு அருகில் பரமஹம்ஸரும் ஒரு பாலன் போன்று பாயின் மீது வந்து உட்கார்ந்துகொண்டார். பெருமகிழ்வுடன் பக்தர்களோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கும் விளங்குகின்ற எளிய பாங்கில் பாரமார்த்திக விஷயங்களை அவர் பகர்ந்துகொண்டிருந்தார். அப்படிப் பேசுதற்கிடையில் தாம் சாதனங்கள் புரிந்துவந்தபொழுது பெற்றிருந்த சில அனுபவங்களைச் சான்றுகளாக எடுத்து இயம்பிக்கொண்டு வந்தார்.

“நான் சமாதி நிலையை அடைந்தான பிறகு லௌகிக விஷயம் எதையும் கேட்க என் மனது இசையவில்லை. பாரமார்த்திக விஷயம் ஒன்றில்தான் எனக்குத் திருப்தியுண்டாயிற்று. எங்கெல்லாம் கடவுளைப் பற்றிய பேச்சு நிகழ்ந்ததோ ஆங்கு மகிழ்வுடன் நான் போவதுண்டு. சில இடங்களில் பாகவதம், அத்யாத்ம ராமாயணம் முதலிய பக்தி நூல்கள் படனம் பண்ணி வந்தார்கள். அதையெல்லாம் கேட்பதில் எனக்கு ஆனந்தம் மிக உண்டாயிற்று. வைஷ்ணவ பக்தர்களுள் சிறப்புற்று விளங்கியவராகிய கிருஷ்ணகிசோர் அத்யாத்மிக ராமாயணம் வாசிப்பதுண்டு. அதைக் கேட்பதற்கு நான் அடிக்கடி ஆங்கு சென்று வருவேன்.”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s