THE GARLAND OF PARAPARAM – 21

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 21:

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து

அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே.

விளக்கம்:

மானுட அமைப்பில் ஐம்பூதங்களால் ஆகிய ஸ்தூல சரீரமும், ஐம்பூதங்களின் தன்மாத்திரைகளாகிய சூக்ஷ்ம சரீரமும் இடம் பெற்றிருக்கின்றன. மேனி, ஸ்தூல சரீரம் எனப்படுகிறது. நெஞ்சம் சூக்ஷ்ம சரீரமாகிறது. உடல் உள்ளம் ஆகிய இவ்விரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் உறுதி பெற்றால் உள்ளமும் உறுதி பெறுகிறது. உடல் தளர்வுற்றால் உள்ளமும் தளர்வுறுகிறது. இனி உள்ளத்தில் ஏற்படுகின்ற விகாரங்களுக்கும், மாறுபாடுகளுக்கும் ஏற்ப உடலிலும் மாறுதல் உண்டாகின்றது. காமம், கோபம் போன்ற சிறு நிலைகளை முன்னிட்டு உடல் உருகுவதுண்டு. உடலிலுள்ள எலும்பும் உருகுவதுண்டு. உள்ளத்தில் பெருங்குழப்பமும் அதன் விளைவாக வந்தமைகிறது. உடல், உள்ளம் ஆகிய இரண்டையும் உருக்கும் தன்மை பக்திக்கும் உண்டு. பக்தியின் வசப்பட்டு உருகுவதால் தெய்வீகம் ஓங்குகிறது. காமக் குரோதங்களால் உருவதால் அரக்க இயல்பு ஓங்குகிறது. இறைவா! எனது உடலும் உள்ளமும் பக்தியின் மேலீட்டால் கரைந்து கரைந்து உருகவேண்டுமென நான் உன்னை நாடி வருந்தி நிற்கின்றேன்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 21:

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து

அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே.

enburugi nenjam iLagik karaindu karaindu

anburuvAi niRka alanthEn parAparamE.

In intense desire I sought

to stand as love embodied,

Bones melting and heart in devotion dissolving,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Hey Paraaparam, I hanker to be the embodiment of love that melts the bone, loosens the mind and dissolves it completely.

-Swami Chidbhavananda.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s