Sri Paramahamsarin Apta Mozi – 94

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 94

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 93: https://swamichidbhavananda.wordpress.com/2016/06/30/sri-paramahamsarin-apta-mozi-93/)

கிருஷ்ணகிசோரும் பகவத் நாம நம்பிக்கையும்

கிருஷ்ணகிசோருக்கு அளவுகடந்த தெய்வபக்தி இருந்தது. பகவந் நாமத்தில் அளப்பரிய விசுவாசம் அவர் வைத்திருந்தார். ஒருதடவை அவர் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தார். அப்பொழுது ஐதிகத்துக்கு ஒப்ப அத்திருப்பதியை அவர் வலம் வந்துகொண்டிருந்தார். எட்டு மைல் தூரம் நடந்தாக வேண்டும். அப்படி நடந்துகொண்டிருந்தபொழுது அவருக்குத் தாகம் மிக உண்டாயிற்று. வழியில் ஒரு கேணிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மனிதன் ஒருவனைப் பார்த்தார். “அப்பா, எனக்குத் தாகம் மிக எடுக்கின்றது. கிணற்றினின்று சிறிது நீர் சேந்தித்தா” என்று கேட்டார்.

அதற்கு அம்மனிதன், “ஐயனே, நான் இழிகுலத்தில் பிறந்தவன். தாங்களோ வைதிகம் நிறைந்த அந்தணர். நான் இறைத்துத் தரும் நீரை நீங்கள் அருந்துவது ஒவ்வேதே” என்றான். பகவத் விசுவாசம் கொண்டிருந்த கிருஷ்ணகிசோருக்கு சமரச மனப்பான்மையும் இருந்தது. அவர் வைஷ்ணவ பக்தர் எனினும் திருநீறு பூசியிருந்த அவ் இழிகுலத்தோனைப் பார்த்து அவர் இங்ஙனம் பகர்ந்தார்: ‘மகனே, உன் குலத்தை பற்றி நீ கவலைப்பட வேண்டம். சிவபெருமானுடைய திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு, நீ கொஞ்சம் நீர் சேந்தி எடு. அவருடைய நாமத்தை நீ உச்சரித்துக்கொண்டிருப்பாயாகில் நீ புனிதமடைகின்றாய். நீ சேர்ந்தும் நீரும் புனிதமடைந்துவிடுகிறது” என்றார்.

அவர் சொற்படி அம்மனிதனும் நீர் இறைத்துக்கொடுத்தான். புண்ணிய தீர்த்தமாகக் கருதி அவரும் அதைப் பருகினார். பகவந்நாமத்தை வெறுமனே வாயால் ஓதிக்கொண்டிருப்பது போதாது. அதை ஓதுகின்றவன் புனிதம் அடைகின்றான் என்னும் பெரிய நம்பிக்கை இருக்க வேண்டும். கிருஷ்ணகிசோருக்குப் பகவந்நாமத்தில் அத்தியந்த நம்பிக்கை இருந்தது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s