THE GARLAND OF PARAPARAM – 22

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 22:

சுத்த அறிவாய்ச் சுகம் பொருந்தின் அல்லால் என்

சித்தம் தெளியாதுஎன் செய்வேன் பராபரமே.

  • சுத்த அறிவு – சுத்த சைதன்யம்.
  • சித்தம் – மனம்.

விளக்கம்:

பரவஸ்து சுத்த சைதன்யம் என்றும், வாலறிவு என்றும், பிரக்ஞை என்றும், பிரக்ஞானம் என்றும் பகரப் பெறுகின்றது. அந்த சுத்த சைதன்யமானது சித்தம் அல்லது மனத்தில் பிரதிபலிக்கின்றபொழுது அல்ப சுகமாகவும், துக்கமாக மாறும் தன்மை உடையதாகவும் அமைகிறது. இதற்குச் சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சந்திரனுடைய பிம்பம் தெளிந்த நீரில் உள்ளபடி தென்படுகிறது. அலை வீசுகின்ற நீரிலோ சிதறடைந்த சந்திரனாகப் பிரதிபலிக்கின்றது. மனநிலை உண்டாகின்ற கொந்தளிப்புகள் யாவும் அக்ஞானத்தில் தோன்றியவைகளாம். அந்த மனத்தைச் சுத்த சைதன்யத்தில் லயப்படுத்துமளவு அது தெளிவடைகிறது. விகாரப்பட்ட அறிவு, சுத்த அறிவாக நடுநிலை எய்துகிறது. மனதை உலக வியவகாரங்களில் செலுத்துகின்ற அளவு அது கொந்தளிப்பு அடைகிறது. அதற்கு ஏற்பச் சுத்த சைதன்யத்தைப் பிளவுபட்டது போன்று தோற்றுவிக்கும் தன்மையும் அதனிடத்து உண்டு. புறவுலகில் உலவுகின்ற சித்தத்தை ஆத்ம சொரூபத்தில் ஒடுங்கும்படி செய்யுமிடத்து இயல்பாக உள்ள பரமசுகம் தானாகத் தோன்றுகின்றது. மனவொடுக்கமும் ஆத்மாவின் ஆனந்தமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஈசா! நான் மனம் தெளிந்த ஆத்மானந்தத்தில் திளைத்திருப்பேனாக.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 22:

சுத்த அறிவாய்ச் சுகம் பொருந்தின் அல்லால்என்

சித்தம் தெளியாதுஎன் செய்வேன் பராபரமே.

Suththa aRivAych chugam porunthin allAl-en

Siththam theLiyAthu-en seivEn parAparamE


Unless I attain Bliss,

My awareness purified,

My vision cannot clear be.

What shall I do?

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Merciful Paraaparam, my mind will not clarify unless I get fixed in the rapture of pure consciousness; what shall I do?

-Swami Chidbhavananda.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s