Question & Answer – 19

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 19: கர்மயோக நூலில் “தேச கால நிமித்தத்துக்கு அப்பாலாக இருந்து அவ்வெல்லைக்கு உட்பட்டபின் சித்தமாக மாறிய பொருள் மீண்டும் அவ்வெல்லையைக் கடக்கும் பொழுது, பந்தத்தினின்று நீங்கியதாகும். பந்தம் நீங்கிய நிலையிலிருந்து வந்து பந்தத்தைப் பற்றியதாதலின், மறுபடியும் பந்தம் நீகிய நிலையை அடையும் ஆற்றலும் அதற்கு உண்டு” என்று இருக்கிறது. இங்கு ஜீவனைப் பற்றிக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. காரணமின்றிக் காரியம் இல்லையென்பது மாற்ற முடியாத நியதி அன்றோ? ஜீவன் பந்தம் நீங்கிய நிலையிலிருந்தபோழ்து அது நியதிக்குட்படாததன்றோ? அங்ஙனமிருக்க அவ்வுயர் நிலையிலிருந்த பொருள் ஜீவனாகக் கீழிறங்கக் காரணம் யாது?

பதில்: விவேகானந்த சுவாமிகள் இயற்றிய கர்மயோகத்தின் “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்னும் ஏழாவது அதிகாரத்தில் இரண்டாவது பத்தியின் முடிவில் இங்கு செப்பிய வாசகம் அமைந்திருக்கிறது. பந்தத்திற்கு உட்படாத ஆத்மா எப்படி பந்தத்தில் உட்பட்டதாகிறது என்பது இக்கேள்வியின் சுருக்கம். இது மிகமிகப் பழைய கேள்வி. என்றென்றும் எல்லார்க்கிடையிலும் இக்கேள்வி எழுந்துகொண்டே  இருக்கும். தீர்க்க தரிசிகள் இதற்குத் தரும் விடை ஒன்றே. பந்தத்தில் இருக்கும் பரியந்தம் இக்கேள்விக்குத் தகுந்த விடையைத் தர முடியாது. பந்தம் நீங்கிய பின் இக்கேள்வி எழுவது கிடையாது. ஒரு சான்றின் மூலம் இது விளக்கப்படுகிறது. மனிதன் கனவு காண்கிறான். கனவில் யாரோ அவனைத் துன்புறுத்துகிறார்கள். கனவு கண்டு கொண்டிருக்கும் வேளையில் அவனுக்குத் துன்பம் எங்கிருந்து வந்தது என்னும் கேள்விக்குக் காரணகாரிய பூர்வமாக விடை கண்டுபிடிக்க இயலாது. கனவினின்று எழுந்துகொண்டே பிறகு இக்கேள்வியை யாரும் கேட்பதில்லை. இதே விடையைத்தான் இக்கேள்விக்கு நாம் சொல்ல முடியும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s