Sri Paramahamsarin Apta Mozi – 96

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 96

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 95: https://swamichidbhavananda.wordpress.com/2016/07/14/sri-paramahamsarin-apta-mozi-95/)

அருள் பித்து

ஒரு தடவை கிருஷ்ணகிசோர் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கேள்வி ஒன்று கேட்டார்: “உங்களுடைய யக்ஞோபவீதத்தை நீங்கள் ஏன் புறக்கணித்துவிட்டீர்கள்?” என்பது அவர் கிளப்பிய கேள்வி ஆகும். அதற்குப் பரமஹம்ஸர் பகர்ந்ததாவது: “அக்காலத்தில் பக்தி பரவசநிலை ஒன்று என்னைக் கவர்வதாயிற்று. அதன் வேகத்தை என்னென்று நான் இயம்புவேன்! பெரிய புயல்காற்று அடித்தது போன்று என் உள்ளத்தை அது வந்து தாக்கிக் கொண்டிருந்தது. என்னுடைய பழைய இயல்புகளெல்லாம் அதன் விளைவாக என்னிடத்திருந்து பறந்து ஓடிவிட்டன.  மேலே அணிந்திருந்த உடையைப் பற்றிய உணர்வு கூட அப்பொழுது எனக்கு உண்டாகவில்லை. பின்பு பூணூலைப் பற்றிய பேச்சு எழ இடமெங்கே? எனக்கு ஏற்பட்டிருந்த மனநிலை உங்களுக்கும் ஒரு தடவையாவது வருமாகில் அப்பொழுது என் செயலை நீங்கள் உள்ளபடி அறிந்துகொள்வீர்கள்.”

சிறிது காலத்துக்குப் பிறகு கிருஷ்ணகிசோருக்குப் பக்திப் பரவசநிலை உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. அருள் பித்தம் பிடித்தவர் போன்று அவர் நடந்துகொள்ள ஆரம்பித்தார். தமது அறைக்குள்ளேயே அடைபட்டு இருந்துகொண்டு அல்லும் பகலும் “ஓம்” என்னும் பிரணவத்தை அவர் ஓயாது உச்சரித்துக்கொண்டே இருந்தார். அதில் அவர் அடைந்த ஆனந்தம் ஒப்பற்றது. ஆனால் அவருடைய உற்றார் உறவினர் அவருடைய நடத்தையைத் தவறுதலாக அர்த்தம் பண்ணிக் கொண்டனர். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் எண்ணினர். சிகிச்சை செய்வதற்காக அருகிலுள்ள நடுவூர் என்னும் கிராமத்திற்குச் சென்றார்கள். ஆங்கு வசித்துவந்த பிரசித்தி பெற்ற ராம வைத்தியர் என்பாரை அழைத்து வந்தார்கள். அவரும் இவரைப் பரிசோதனை செய்து சிகிச்சை செய்ய முன்வந்தார். வைத்தியரைக் கண்ட  கிருஷ்ணகிசோர் நகைச்சுவை ததும்பும் பாங்கில் பதில் ஒன்று பகர்ந்தார்: ‘வைத்தியரே, என்னிடத்தில் பித்தம் ஏதாவது இருந்தால் அதைப் போக்க நீங்கள் வேண்டியவாறு முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னுள் ஊறிக்கிடக்கும் அருள் பித்தத்தை மட்டும் நீங்கள் அசைக்க முடியாது. நான் உச்சரிக்கும் பிரணவத்தை அகற்றிவிட உம்மால் இயலாது!”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s