Question & Answer – 20

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 20: கர்மத்தில் ஞானம் இருக்கிறது; ஞானத்தில் கர்மம் இருக்கிறது. விளக்கம் என்ன?

பதில்: ஐரோப்பாவிலிருந்த ஆதிமனிதர்களுக்குச் சமைப்பதைப் பற்றிய ஞானம் இல்லை. அவர்கள் பச்சை மாமிசத்தைப் புசித்து வந்தார்கள். ஒருதடவை அவர்கள் வளர்த்து வந்த பன்றிகள் இருந்த குடிசை தீப்பற்றிக்கொண்டது. அதில் தீய்ந்துபோய்ப் பன்றி ஒன்று மாண்டு போயிற்று. தீய்ந்துபோன மாமிசத்தைப் புசித்துப் பார்த்தார்கள். அதில் சுவை அதிகம் இருந்ததைக் கண்டார்கள். அந்த ஞானம் அவர்கள் கையாண்ட கர்மத்தின் விளைவாம். எப்பொழுதெல்லாம் சுவையான பன்றி மாமிசத்தைப் புசிக்க விரும்பினார்களோ அப்பொழுதெல்லாம் பன்றிகள் இருந்த குடிசைக்குத் தீ வைத்தார்கள். நாளடைவில் குடிசைகளுக்குத் தீ வைக்காமல் பன்றியைக் கொன்று தீயில் சுடலாம் என்ற ஞானம் அவர்களுக்கு வந்தது. இச்செயலில் கர்மத்தின் விளைவாக ஞானமும் பிறகு ஞானத்தைப் பயன்படுத்திக் கர்மத்தை முறையாகச் செய்யவும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். இக்கேள்விக்கு விடை இந்நிகழ்ச்சியில் இருக்கிறது.

தத்துவப்பூர்வமாகப் பார்க்குமிடத்துப் பிரபஞ்ச வாழ்வு கர்ம மயமானது. அந்தக் கர்மத்தைச் செய்துகொண்டு போகப் போக அதினின்று வருகின்ற அனுபவம் ஞானமாக வடிவெடுக்கிறது. பிறகு அந்த ஞானத்தைக் கையாண்டு வினையின் விளைவை மேன்மைப்படுத்தலாம்.

பௌதிக விஞ்ஞானிகள் கர்மத்தின் வாயிலாக இயற்கையில் அமைந்துள்ள மேலான கோட்பாடுகளை அறியவந்தார்கள். மேலான கோட்பாடு என்னும் ஞானத்தைப் பயன்படுத்திக் கர்மத்தை நன்கு சாதிக்கும் திறமை இப்போது உலகத்தவர்களுக்கிடையில் இருக்கிறது.

பிரபஞ்ச வாழ்வு கர்ம சொரூபமானது. எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும் கர்மத்தில் உள்ள கேட்டை அகற்றி நலத்தை மட்டும் பெற முடியாது என்னும் ஞானம் பேரறிஞர்களுக்கு வந்தது. பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள நிலையில் நலமும் இல்லை; கேடும் இல்லை. பேரானந்தமே எஞ்சியிருக்கிறது என்னும் முடிவுக்கு நிறைஞானிகள் வந்தார்கள். இங்ஙனம் கர்மத்தின் வாயிலாகப் பிரபஞ்சத்தின் பாங்கை அறிந்துகொள்ளும் ஞானம் அவர்களுக்கு வந்தது எனலாம். அந்த ஞானத்தைப் பயன்படுத்திக் கர்மாதீதத்துக்குப் போவதற்கான முறையை அவர்கள் கண்டறிந்தார்கள். இதுவே முடிந்த நிலையில் கர்மத்தின் விளைவாக ஏற்படும் ஞானத்தைக் கொண்டு, கர்மத்தை நன்கு ஆற்றவோ கர்மாதீதத்துக்குப் போகவோ மனிதனுக்குச் சாத்தியம் என்னும் பேரறிவை ஞானிகள் பெறலாயினர்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s