THE GARLAND OF PARAPARAM – 24

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 24:

தாகம் அறிந்து இன்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்

தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே.

விளக்கம்:

தேகம் எப்பொழுது வேண்டுமானாலும் அழியும் பாங்குடையது என்கின்ற பேருண்மையை ஞாபகத்தில் வைப்பதற்கு ஏற்ப அருள்தாகம் உள்ளத்தில் உருவெடுக்கிறது. பருக நீர் வேண்டுமென்று தாகமெடுக்கின்றபொழுது அதற்கு மனிதன் எத்தகைய அரும்பாடுபடுகிறானோ அதே பாங்கில் பரமனைக் குறித்து அருள்தாகம் வளருமாகில் அது வாய்ப்பதற்கரிய பேறு ஆகும். அதன் வேகத்திற்கு ஏற்றவாறு பாரமார்த்திகத்தில் மனிதன் விரைந்து முன்னேற்றம் அடைகின்றான். சாதகனுடைய நாட்டத்திற்கு ஏற்றவாறு பாரமார்த்திகத்தில் மனிதன் விரைந்து முன்னேற்றம் அடைகின்றான். சாதகனுடைய நாட்டத்திற்கு ஏற்றவாறு இறைவன் அருள் சுரக்கிறான்.  தாகத்தால் வருந்துகின்றவன் நீர் பருகிய பிறகு பரம திருப்தி அடைகிறான். அங்ஙனம் அருள்தாகம் நிறைவேறப் பெற்றவனுக்கு வீடுபேறு வாய்க்கிறது. மானுடப் பிறவியின் குறிக்கோள் அதுவே. அதை அடையப் பெறாதவன் கெட்டொழிந்தவனாகிறான். இந்த நெருக்கடியான நிலையை உள்ளம் கனிந்த பிரார்த்தனையாகத் தாயுமானவர் பரமனிடம் சமர்ப்பிக்கிறார்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 24:

தாகம்அறிந்து இன்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்

தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே.

thAgamaRinthu inbanittai thArAyEl Ah!keduvEn

thEgam vizunthidin yen seyvEn parAparamE


Unless Thou grant me

The blissful samadahi state,

Knowing well my thirst,

Ruined will I be.

What shall I do

When the body falleth?

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Alas! Fallen shall I be if you do not take note of my spiritual thirst and endow me with blissful ecstasy. O Paraaparam, what shall I do if the body falls?

-Swami Chidbhavananda.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s