THE GARLAND OF PARAPARAM – 25

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 25:

அப்பாஎன் எய்ப்பில்வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று

செப்புவது அல்லால்வேறுஎன் செய்வேன் பராபரமே.

  • எய்ப்பு – வறுமைக்காலம்.
  • வைப்பு – சேகரித்த செல்வம்.

விளக்கம்:

ஆற்றுகிலேன் என்பதன் அடிப்படைக் கருத்து உலக வாழ்க்கையில் ஏதேதோ வரும் துன்பத்தை முன்னிட்டுச் சகிக்க முடியாமல் உலகத்தவர்கள் புலம்புவதுண்டு. அதே பாங்கில் பக்தனும் அருள்பேறு வாய்க்கவில்லையென்று புலம்புவதுண்டு. பக்தன் தன்னுடைய வருத்தம் முழுவதையும் தெய்வத்திடத்து மட்டும் தெரிவிக்கிறான். அப்பா என்னும் சொல் உலகத் தந்தைக்கு உரியதாய் இருப்பதைவிட அருள் தந்தையாகிய இறைவனுக்கு உரியதாகிறது. இளமையில் சம்பாதித்த செல்வம் முதுமையில், வறுமையில் உதவுகிறது. ஆனால் அது அழியும், அபகரிக்கும் பாங்குடையது. இறைவனைக் குறித்து எய்ப்பில் வைப்பு என்று இயம்புவது முற்றிலும் பொருத்தமானது. எல்லாப் பிறவிகளிலும் எய்ப்பில்  வைப்பாக இருப்பவன் இறைவன். மனம் தளர்வுற்றிருக்கும் காலமெல்லாம் எய்ப்பில் வைப்பாக இருப்பவன் இறைவன். அப்படி இறைவனைக் குறித்துத் தன் குறைநிலையை முறையிட்டுக் கதறிப் பதறி அழுகின்றவர்கள் பாக்கியவான்கள். அத்தகையவர்களுக்கு இறைவனிடமிருந்து உறுதியாக ஆறுதல் வருகிறது.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 25:

அப்பாஎன் எய்ப்பில்வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று

செப்புவது அல்லால்வேறுஎன் செய்வேன் பராபரமே.

appAyen yeippilvaippE AtrugilEn pOtri enRu

Seppuvathu allAlvERuyen seivEn parAparamE.


“Oh Father! My inexhaustible Treasure!

No more can I endure. Glory be to Thee” –

Except that I adore Thee thus,

What can I do?

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Father, you are Treasure to me in distress. I am in agony. Beloved Paraaparam, what else can I do other than adoring you?

-Swami Chidbhavananda.


 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s