Sri Paramahamsarin Apta Mozi – 98

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 98

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 97: https://swamichidbhavananda.wordpress.com/2016/07/28/sri-paramahamsarin-apta-mozi-97/)

புல்லிய மனப்பான்மை

ஒரு நாள் நான் யதுமல்லிகருடைய பங்களாவில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது யதீந்திரர் என்னும் செல்வந்தர் ஒருவர் ஆங்கு வந்து சேர்ந்தார். அவர் பட்டதாரிகளுள் ஒருவர். கல்கத்தாவின் முக்கியமான பிரமுகர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரிடம் நான் கேள்வி ஒன்று கேட்டேன். “மானுடப் பிறவி எடுத்திருப்பதின் முக்கியமான நோக்கம் கடவுளை அடைவதற்காக அல்லவா?” என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு விபரீதமான விடை கொடுத்தார். “கடவுளைப் பற்றியெல்லாம் சிந்திக்க எங்களுக்கு நேரம் எங்கே? உலக அலுவல்களும், தொல்லைகளும் எண்ணிக்கையில் அடங்காதவைகளாக இருக்கின்றன. உலகில் தோன்றியுள்ள மக்களுள் யுதிஷ்டிரர் தர்மராஜனை மிகப் பெரியவர் என்று உலகத்தவர் சிலாகித்துப் பேசுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் போன்றவருடைய நிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் அறிகிறோம். அவரிடத்திருந்த சில குறைபாடுகளை முன்னிட்டு அத்தகைய பெரியவரே நரகத்தின் காட்சியைக் கொஞ்சகாலம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிறகு நம் போன்றவர்களுடைய நிலைமை எம்மாத்திரம்!”

யதீந்திரர் இப்படிப் பகர்வதைக் கேட்ட எனக்குச் சிறிது ஆத்திரம் உண்டாயிற்று. பரபரப்புடன் நான் பகர்ந்ததாவது, “நீர் எத்தகைய மனிதர்? உம்முடைய மனப்பான்மை விந்தைக்குரியதாய் இருக்கிறது. தர்மராஜன் யுதிஷ்டிரரிடம் இருந்த எண்ணிறந்த நல்ல குணங்களெல்லாம் உமது மனதில் இடம் பெறவில்லை. அவரிடத்திருந்த மிகமிகச் சிறிய குறைபாடு ஒன்றை மட்டும் பெருமிதப்படுத்தி அதற்கு உமது உள்ளத்தில் இடம் கொடுத்திருக்கிறீர். அவரிடத்திருந்த சத்தியம், சகிப்பு, பொறுமை, விவேகம், வைராக்கியம், ஈசுவர பக்தி ஆகியவைகளெல்லாம் உம் கருத்தில் படவில்லை போலும்.” இவை போன்ற இன்னும் சில சுடு சொற்களை நான் பகரத் துணிந்தேன். அதற்குள்ளாக ஹிருதயர் வந்து தம் கரத்தால் என் வாயைப் பொத்திப் பேச்சை நிறுத்திவிட்டார். சிறிது நேரத்துக்குள் யதீந்திரர் மேலும் ஒன்றும் பேசாது அவ்விடத்தை விட்டு வெளியே கிளம்பிவிட்டார். தமக்கு ஏதோ அவசரமான அலுவல் இருந்தது என்று சாக்கு சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

பல நாளைக்குப் பிறகு நேப்பால் ராஜ்யத்துச் சேனைத் தலைவராகிய விஸ்வநாதருடன் நான் மற்றொரு பிரமுகரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருடைய பெயர் ராஜா சௌரீந்திர தாகூர். ராஜா என்னும் பட்டம் அவருக்கு ஆங்கிலேய ஆட்சியில் அளிக்கப்பட்டது. அம்மனிதரைப் பார்த்ததும் என் உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்வு உண்டாயிற்று. அதை மறைத்து வைக்காது உள்ளபடி நான் எடுத்தோத அதற்கு நிகராயுள்ள வேறு எப்பட்டத்தை வைத்தோ அழைக்கமாட்டேன். உண்மையில் நீர் ராஜா அல்ல. அப்படி அழைத்தால் அது பொய் சொல்லுவதற்கு ஒப்பாகும். ஏதோ சில வார்த்தைகளை அவர் என்னோடு பேசினார். ஆனால் அதற்குள் இடையூறுகள் பல ஏற்பட்டன. அவரைப் பார்ப்பதற்கு ஐரோப்பியர்களும், மற்றவர்களும் அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். சௌரீந்திர தாகூரிடம் ரஜோகுணம் மிகைபடத் தலையெடுத்திருந்தது. பொருளற்ற பல அலுவல்களில் அவர் பெரிதும் ஈடுபட்டிருந்தார்.

அந்த இல்லத்துக்கு நான் போயிருந்ததைப் பற்றிய செய்தியைப் பழைய யதீந்திரருக்குத் தெரிவித்தார்கள். அவர் இந்தச் சௌரீந்திர தாகூருடைய தமையனார் ஆவார். தமக்கு எட்டிய செய்தியை யதீந்திரர் வெறுமனே காதில் போட்டுக் கொண்டார். ஆனால் தம் அறையை விட்டு என்னைக் காண்பதற்கு அவர் வெளியில் வரவில்லை. தொண்டையில் ஏதோ சிறிது வலி இருக்கிறது என்று அவர் சாக்குச் சொல்லிவிட்டுத் தம் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s