Monthly Archives: September 2016

Sri Paramahamsarin Apta Mozi – 105

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 105

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 104: https://swamichidbhavananda.wordpress.com/2016/09/22/sri-paramahamsarin-apta-mozi-104/)

ஆலயத்தில் நித்திய வழிபாடு

இதற்குள்ளாக ஆலயத்தின்கண் இருந்த வெவ்வேறு சன்னிதிகளில் திருப்பள்ளியெழுச்சி நிகழ்வதாயிற்று. சங்க நாதம் தொனித்தது; தாளம் ஒலித்தது; பாடல்கள் பாடப் பெற்றன. அர்ச்சகர்களும், ஆலய சிப்பந்திகளும் வெளியே வந்து மலர் கொய்தல் முதலிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தனர். நித்திய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் முன் வந்தனர். பாணர் மண்டபத்தினின்று ஒலித்த இன்னிசைக் கருவிகளின் இனிய ஓசை நாலாபக்கமும் பரவி வருவதாயிற்று. காலை வேளைக்கு ஏற்ற இனிய ஓசை விருந்தாக அது செவியில் வந்து படிந்தது. தங்களுடைய காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு நரேந்திரர் முதலிய அன்பர்கள் பரமஹம்ஸரின் முன்னிலைக்கு வந்து சேர்ந்தார்கள். தமது அறையின் வடகிழக்குத் திண்ணையில் வாயிலுக்கு அருகில் பரமஹம்ஸ தேவர் புன்னகை பூத்தவராக நின்று கொண்டிருந்தார். அவருடைய முகவிலாசத்தினின்று மலர்ந்த புன்முறுவல் பார்ப்பவர்களுடைய உள்ளத்தைப் பாரமார்த்திகப் பெருநிலைக்கு எடுத்துச் சென்றது.

நரேந்திரருடன் பேச்சு

நரேந்திரர் பகர்வாராயினர்: குருநானக்கினுடைய சம்பிரதாயத்தைச் சேர்ந்த சந்நியாசிகள் பலரைப் பஞ்சவடிக்கு அருகில் நாங்கள் பார்த்தோம்.

பரமஹம்ஸர்: ஆம். நேற்று அன்னவர் இங்கு வந்து சேர்ந்தனர். பக்தர்களாகிய நீங்கள் அனைவரும் பாயின்மீது ஒன்றுகூடி அமர்ந்திருப்பதைக் காண நான் அவாவுறுகிறேன்.

அவர் விருப்பத்தின் படி அவர்கள் எல்லாரும் ஆங்கு அமர்ந்தனர். பக்தர் குழாத்தின் காட்சியைக் கண்டு பரமஹம்ஸர் பரமதிருப்தி அடைந்தார். பின்பு அவர் அவர்களோடு உரையாட ஆரம்பித்தார். பாரமார்த்திக வாழ்க்கை சம்பந்தமான நியதிகளைப் பற்றி நரேந்திரர் பரமஹமஸரிடம் கேட்டார்.

“பாரமார்த்திக வாழ்க்கை நியமனங்களுள் தூய பக்தியே தலைசிறந்ததாகிறது. பக்தி உடையவர்களுக்கு ஏனைய நியமனங்களெல்லாம் இயல்பாக வந்து அமைந்துவிடுகின்றன. விவேகமும், வைராக்கியமும் அத்தகையவர்களுடைய பேரியல்புகளாக வடிவெடுத்துவிடுகின்றன.

Advertisements

THE GARLAND OF PARAPARAM – 32

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 32:

கடலமுதே தேனேஎன் கண்ணே கவலைப்

படமுடியா(து) என்னைமுகம் பார்நீ பராபரமே.

விளக்கம்:

கடலமுது, தேன், கண் என்று தாயுமானவர் இறைவனைக் குறிக்கிறார். கடலமுது என்னும் சொல் பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைந்தபொழுது தோன்றிய அமிர்தத்தைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தில் பாற்கடல் இல்லை. ஆனால் வாழ்வு என்னும் கடலுக்கு உருவகமாக அமைந்துள்ளது. பெற விரும்புபவைகளில் பெரும்பகுதி வாழ்க்கையில் வந்து வாய்க்கின்றன. அப்படி வாய்க்காவிடில் எந்த உயிரும் வாழ்வை விரும்பாது. உயிரனைத்தும் வாழ்வை விரும்புதற்குக் காரணம் வாழ்வில் லக்ஷியம் அதன் மூலம் நிறைவேறுதலேயாம். அத்தகைய அமிர்த சொரூபமாய் இருப்பது பரம்பொருள். அது அனுபூதிமான்களுக்கே விளங்குகிறது. உணவு வைகளுள் தேன் உயர்ந்தது. உறுப்புகளுள் கண் முக்கியமானது. அமுது, தேன், கண் போன்று சிறந்த வாழ்விற்கு முக்கியம் வாய்ந்த இறைவா! என் பிரபஞ்சக் கவலையை மாற்றுதற்கு உன் திருக்கருணை முகங்கொண்டு என்னைப் பார்ப்பாயாக என்று அண்ணல் விண்ணப்பிக்கிறார்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 32:

  கடலமுதே தேனேஎன் கண்ணே கவலைப்

  படமுடியா(து) என்னைமுகம் பார்நீ பராபரமே.

kadalamudE thEnE yen kaNNE kavalaip

padamudiyA(thu) ennaimugam pAr nee parAparamE.


Oh Ambrosia born of the ocean!

Oh Nectar! Mine eyes!

Pray take pity on me

And wipe off may distress,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

O, ocean of nectar, honey, my eye, I can no more pine. Have mercy on me, O Paraaparam.

-Swami Chidbhavananda.