Sri Paramahamsarin Apta Mozi – 103

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி 103

wpid-paramahamsarin-apta-mozi.png.png

முந்தைய பகுதி – மொழி 102: https://swamichidbhavananda.wordpress.com/2016/09/01/sri-paramahamsarin-apta-mozi-102/

நல்ல கனவு

அன்பர்: “ஆம் ஐயனே, அன்றொரு நாள் நான் ஒரு நூதனமான கனவு கண்டேன். உலகம் முழுதும் நீரில் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். எங்குத் திரும்பிப் பார்த்தாலும் நீர்ப்பெருக்கே தென்பட்டது. சில படகுகள் தென்பட்டன. ஆனால் திடீரென்று பேரலைகள் புரண்டோடி வந்து அப்படகுகளை மூழ்கடித்துவிட்டன. இன்னும் சிலரோடு நான் கப்பல் ஒன்றினுள் ஏற முயற்சி செய்தேன். அவ்வேளையில் பிராம்மணர் ஒருவர் அக்கடலின் மீது நடந்து வருவதைக் கண்டேன். ‘ஆழ்கடலின்  மீது நீங்கள் இங்ஙனம் எப்படி நடக்க முடிகிறது?’ என்று நான் அவரைக் கேட்டேன். புன்னகை பூத்தவராக அவர் பதில் விடுத்தார். ‘இதில் கஷ்டமென்ன இருக்கிறது? வெளிக்குத் தென்படுகிற நீருக்குச் சற்றுக்கீழ் கண்ணுக்குத் தென்படாத பாலம் ஒன்றிருக்கிறது. அதன்மீது நான் நடந்து வருகிறேன்’ என்றார். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘அன்னை பராசக்தியின் வாசஸ்தலமாகிய பவானிபூருக்கு நான் போகிறேன்’ என்று அவர் விடைவிடுத்தார். ‘சற்றுப் பொறுங்கள், நானும் உங்களோடு வந்து சேர்ந்துகொள்கிறேன்’ என்று நான் கூச்சலிட்டேன்.”

இவ்வரலாற்றைக் கேட்டு, நான் பெருவியப்படைகிறேன் என்று பரமஹம்ஸர் பகர்ந்தார்.

அன்பர்: “பிராம்மணர் மேலும் பகர்ந்ததாவது: ‘நான் விரைவில் செல்ல வேண்டியிருக்கிறது. உனக்காகக் காத்திருக்க முடியாது. நீ கப்பலைவிட்டு வெளியே வருவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும். நான் விடைபெறுகிறேன். இந்த மார்க்கத்தை நீ நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள். பின்பு நீயும் ஆங்கு வந்து சேர்.”

“இதைக் கேட்டு எனக்கு மயிர்க்கூச்சு எடுக்கிறது. தகுந்த குரு ஒருவரிடமிருந்து நீ தீக்ஷை எடுத்துக்கொள்” என்று பரமஹம்ஸர் அந்த அன்பரைப் பார்த்து மேலும் பகர்ந்தார்.

இப்பொழுது நள்ளிரவு ஆய்விட்டது. அனைவரும் படுக்கப் போக ஏற்பாடு செய்தனர். பரமஹம்ஸருடைய அறையினுள் தரையின்மீது பாய் ஒன்று விரிக்கப் பெற்றிருந்தது. நரேந்திரர் அதில் படுத்துறங்க ஆயத்தப்படுத்தினார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s