Question & Answer 27

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 27: தாமிரத்தில் களிம்பு இருப்பது போன்று மனதில் மாசு இருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்று ஞான வாசிஷ்டம் சொல்லுகிறது. ஸ்படிகத்தின் முன்னிலையில் வைத்த ஒரு பூவின் நிறம் ஸ்படிகத்தில் இருப்பது போன்று தென்படினும் உண்மையில் அந்த ஸ்படிகத்தினுள் நிறம் ஒன்றும் ஏறுவதில்லை. அது போன்று மனது உண்மையில் மாசுபடியாதிருக்கிறது. புறப்பொருளின் கூறுகள் மனதை மாசு படிந்தது போன்று காட்டுகின்றன எனக் கைவல்ய நவநீதமும் கூறுகிறது. முரண்பட்டுள்ள இவ்விரண்டு கருத்துக்களுள் எது உண்மை?

பதில்: கோட்பாடு ஒன்றை உபமானத்தைக் கொண்டு விளக்குங்கால் அக்கோட்பாடு நன்கு புலனாகிறது. மனதின்கண் உள்ள மாசு பலப்பல விதங்களில் சாஸ்திரங்களில் பகரப்பட்டிருக்கிறது. அத்தனைவித விளக்கங்களை ஒன்றோடொன்று சீர்தூக்கிப் பார்த்தால் சில வேளைகளில் முரண்பாடும் தென்படக்கூடும். ஆனால் அவற்றின் உட்கருத்தைச் சரியாகத் தெரிந்துகொண்டால் அவைகளுக்கிடையில் முரண்பாடு இருப்பதாக நமக்குத் தோன்றாது.

மனதைச் சுத்தப்படுத்துவது ஆத்மசாதனத்தின் குறி. எடுத்துக்கொண்டுள்ள உபமானம் மனோதத்துவத்துக்கு முற்றிலும் ஒத்ததாக இருக்க முடியாது. ஒரு சிறிதளவே உபமானத்துக்கும், உபமேயத்துக்குமிடையில் ஒற்றுமை காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருவாகிய தோதாபுரி, மனது தாமிரம் போன்றது; அதைத் தினந்தோறும் ஆத்ம சாதனத்தின் மூலம் துலக்காவிட்டால் துரு ஏறிவிடும் என்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அதற்கு விடையாகத் தாமிரம் போன்ற மனதைப் பொன் போன்ற மனதாக மாற்றிவிட்டாலோ என்று கேட்டார். அப்போது அதைத் துலக்க வேண்டியதில்லை என்று குரு விடைவிடுத்தார். தாமிரத்தை ரசவாத முறையில் பொன்னாக்கலாம். மனதை ஆத்மசாதனத்தால் மாசற்றதாக ஆக்கலாம். மனது மிகக் கீழான நிலையில் இருக்கிறபொழுது அது தாமிரம் போன்றதே.  களிம்பை உடைத்திருப்பது அதன் இயல்பு. அதே மனது முற்றிலும் பரிபாகம் ஆன பிறகு ஸ்படிகம் போன்று ஆய்விடுகிறது. ஸ்படிகம் பூவின் நிறத்தை ஏற்பது போன்று தென்படினும் நிஜசொரூபத்திலிருந்து அது மாறுவதில்லை. தூய மனது பிரகிருதியின் கூறுகளை ஏற்பது போன்று தென்படினும் அது ஆத்ம சொரூபத்திலேயே ஒன்றுபட்டிருக்கிறது. சாதகன் தான் அடைந்துவரும் பரிபாகத்தில் எந்தப் படித்தரத்தில் இருக்கிறானோ அதற்கேற்றபடி உபமானம் கையாளப்படுகிறது. ஆரம்பதசையில் இருக்கும் ஆத்ம சாதகனது மனது தாமிரம் போன்றதே. பரிபாகம் அடைந்துள்ளவனது மனது ஸ்படிகம் போன்று தெளிந்ததாகி விடுகிறது. எனவே உண்மையில் இவ்விரண்டுவித விளக்கங்களுக்கிடையில் முரண்பாடு இல்லை.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s