Sri Paramahamsarin Apta Mozi – 106

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 106

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 105: https://swamichidbhavananda.wordpress.com/2016/09/29/sri-paramahamsarin-apta-mozi-105/ )

வாமாசாரம்

நரேந்திரர் மற்றொரு கேள்வி கேட்டார். “ஆத்ம சாதனங்களுள் வாமாசாரம் அதாவது பெண்பாலர்களை அண்மையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய சாதனங்கள் சில இருப்பதாகத் தந்திர சாஸ்திரங்கள் இயம்புகின்றனவாம். அதைப்பற்றித் தாங்கள் என்ன பகர்கின்றீர்கள்?”

பரமஹம்ஸர்: அது பாராட்டத்தக்க சாதனமுறை ஆகாது. அது மிகமிகக் கடினமானது. அத்தகைய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் சாதகர்களில் பலபேர் நெறியினின்று வழுவி கீழ்நிலைக்கு வந்துவிடுகின்றனர். அத்தகைய வாமாசாரத்தில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. அந்த மூன்று பகுதிகளுக்கும் பொது இயல்பாக இருப்பது ஒன்று உண்டு. பெண்பாலர்களைப் பராசக்தியின் சொரூபமாகக் கருதுவதே அத்தகைய பொது இயல்பாகும். அதற்குமேல் அந்த சாதனத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. சக்தியைத் தன்னுடைய தலைவியாகவும், தன்னைச் சிவசொரூபமாகவும் கருதுவது ஒரு முறை. இதுவே மிகமிகக் கடினமானது. இதற்கு அடுத்தபடியாக இருப்பது சாதகன் ஒருவன் தன்னை ஒரு பெண்பாலாகக் கருதிக்கொண்டு தான் பராசக்திக்குத் தோழியாக இருப்பதாக எண்ண வேண்டும். மூன்றாவது பகுதி மற்றொரு சாதன முறையை எடுத்துக்காட்டுகிறது. சாதகன் ஒருவன் தன்னைப் பராசக்தியின் குழந்தையாகக் கருத வேண்டும். இந்த மூன்றினுள் தன்னைச் சக்தியின் குழந்தையாகக் கருதுவதே உத்தமமானது. இந்த முறையைத்தான் நான் கையாண்டு வருகிறேன். இத்தகைய இணக்கம் தூய்மையே வடிவெடுத்தது. தவறிப் போய்விடுவதற்கு இம்முறையில் இடமில்லை.

இவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் குருநானக்கருடைய சம்பிராதயத்தைச் சேர்ந்த சாதுக்கள் பரமஹம்ஸரின் அறைக்குள்ளே வந்து சேர்ந்தார்கள். “ஓம் நமோ நாராயணாய” என்று அவர்கள் பரமஹம்ஸருக்கு வணக்கம் செலுத்தினார்கள். அவர்களை அமர்ந்திருக்கும்படி பரமஹம்ஸர் வேண்டிக்கொண்டார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s