Question & Answer – 29

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 29: ஆத்ம ஞானம் என்றால் என்ன? மெய்யறிவு என்பது என்ன?

பதில்: ஆத்மஞானம், பிரக்ஞானம், பிரம்மஞானம், மெய்ஞ்ஞானம், மெய்யறிவு, வாலறிவு, பேரறிவு என்ற சொற்கள் பரம்பொருளைக் குறிக்கும் சொற்களாகும்.

பரஞானம், அபரஞானம் என்ற இரண்டில் பரஞானம் என்பது இந்திரியாதீதத்திலுள்ள ஞானத்தையும், அபரஞானம் என்பது இந்திரியங்களுக்கு உட்பட்ட அறிவையும் குறிக்கும். இந்திரியங்களைக் கொண்டும் மனதைக்கொண்டும் பெறுகின்ற அறிவுக்குப் பிரப்னஜ் அறிவு அல்லது உலக அறிவு என்று பெயர். உலகம் பஞ்சேந்திரியங்கள் மூலமாக உணரப்படுகின்றது. மனம் பஞ்சேந்திரியங்கள் மூலமாகப் புறவுலகைப் பற்றிய அறிவை நமக்குத் தருகின்றது. பஞ்சேந்திரியங்கள் செயலற்றுப் போய்விட்டால் உலக அறிவு தடைப்படுகிறது.

பஞ்சேந்திரியங்களுக்கு அப்பால் மனம் சென்று ஆங்கு உண்டாகும் உணர்வைப் பெறுமானால் அவ்வுணர்வு ஆத்ம ஞானத்தைத் தரும். மனது சரீர உணர்வைக் கடந்து அப்பால் செல்லும்பொழுதுதான் ஆத்மஞானத்தைத் தெளிவாகப் பெற முடியும். ஐந்து இந்திரியங்கள் மூலமாக அது சிற்றுணர்வுக்கு வசப்பட்டிருக்கும்பொழுது மாசடைந்து விடுகிறது. மாசுடைய மனதைக் கொண்டு ஆத்மஞானம் பெற முடியாது. மனதை மாசற்றதாக்கும்பொழுதுதான் ஆத்மஞானத்துக்குத் தகுதியுடையவர்களாகிறோம்.

மனதில் உலக சம்பந்தமான, காம சம்பந்தமான விருத்திகள் நிறைந்திருக்கின்றன. அவ்விருத்திகள் மனதை உலக சம்பந்தமான எண்ணங்களிலும் காம சம்பந்தமான எண்ணங்களிலும் இழுத்துச் செல்லுகின்றன. அவ்விருத்திகள் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கும்பொழுது நாம் அவற்றின் மயக்கத்துக்கு ஆட்பட்டிருக்கின்றோம். அவற்றின் வேகம் ஓயும் பொழுதுதான் மனம் நித்தியத்துவத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், ஆனந்தத்தைப் பற்றியும் நினைக்கின்றது. அப்பொழுது நாம் சச்சிதானந்த சொரூபம் என்ற விருத்தியை உண்டுபண்ணுகின்றோம். அவ்விருத்தி நாம் ஆத்ம சொரூபம் என்ற உணர்வை உண்டு பண்ணுகிறது. இறுதியில் அவ்விருத்தியும் நசிந்தால் நாம் வேறு, ஆத்ம சொரூபம் வேறு என்ற பேதம் ஒழிகிறது; நாம் ஆத்ம சொரூபமே ஆய்விடுகிறோம். அந்நிலைதான் ஆத்ம ஞானம் பெற்ற நிலையாகும். மனதில் தெளிந்த நிலையை உண்டுபண்ணி நிஜ சொரூபத்தை விளக்கிக் காட்டுவது ஆத்ம ஞானமாகும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s