Manifest of Durga Devi

துர்காதேவியின் சொரூபம்

(நவராத்திரி சிறப்புப் பகிர்வு.)

அம்பிகை பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருக்கிறாள் எனினும் ஆண்டுக்கொருமுறை அவள் ஹிமாசலத்திலிருந்து பூமியில் சமவெளிக்கு எழுந்தருளுகிறாள் என்பது கோட்பாடு. புராட்டாசி மாத்த்தில் வரும் நவராத்திரி அவளுடைய வருகையைக் குறிக்கிறது. பூலோகத்திற்கு எழுந்தருளுகிற துர்காதேவி தத்துவ விளக்கத்துக்குச் சின்னமாகிறாள்.

durgadevi

அவள் சிங்கத்தின் மீது நின்றுகொண்டு மஹிஷாசுரனை வதம் செய்யும் மஹிஷாசுரமர்த்தினியாக மண்ணுலகுக்கு எழுந்தருளுகின்றாள். கன்னங்கரேலென்ற நிறமுடைய அவன் நிலத்தில் நிற்கின்றான். அவனுக்குச் சற்று உயரத்தில் சிம்மத்தின் மீது நின்று அம்பிகை ஆட்சி புரிகின்றாள். அவள் மஞ்சள் மேனி உடையவள். சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கின்றாள். ஆயுதங்கள் பலவற்றை அவள் கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோ குணத்தின் பிரதிநிதியாகின்றான். துர்க்கை ரஜோ குணத்தின் சின்னமாகின்றாள். அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையில் இருக்கின்றார். அவரது வெண்ணிறம் சத்துவ குணத்தைக் காட்டுகின்றது. அவர் தன்னில் தானாய் இருப்பது பிரபஞ்சத்திலுள்ள செயல்களையெல்லாம் கடந்து பரம்பொருளின்பால் செல்வது நமக்கு லட்சியம் என்பதை விளக்குகிறது. உருவமில்லாத பரம்பொருளிடத்திருந்து சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் வடிவெடுக்கின்றன.

தரையில் இருக்கும் தமோகுணத்தின்பால் போராட்டம் அதிகம். ரஜோகுணம், தமோ குணத்தை வெல்லுகிறது. பிறகு அது செல்வமாகவும், கலைகளாகவும், நல்லறிவாகவும், பேராற்றலாகவும் வடிவெடுக்கின்றது. அவைகளை நல்வழியில் பயன்படுத்தி சத்வம் என்னும் நடுநிலையின்பால் அது செல்கிறது. பிறகு முக்குணத்துக்கும் அப்பாலுள்ள பரம்பொருளில் ஜீவனை அந்த சக்தியானது கொண்டு சேர்க்கிறது. இக்கோட்பாட்டை துர்காதேவியின் சொரூபம் விளக்குகிறது.

(மேற்காணும் கட்டுரை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத்கீதை’ புத்தகத்தில் 15வது அத்தியாய ஸ்லோகங்களுக்குக் கொடுத்த விளக்கமாகும். )


[இந்த கட்டுரை 2015 ஆம் ஆண்டு facebook பக்கத்தில் பதிவிடப்பட்டதாகும்.]

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s