Sri Paramahamsarin Apta Mozi – 107

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 107

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 106: https://swamichidbhavananda.wordpress.com/2016/10/06/sri-paramahamsarin-apta-mozi-106/ )

கடவுள் சர்வ சக்திமான்

பரமஹம்ஸர்: பரிபக்குவம் அடைந்துள்ள சித்தர்களைப்பற்றிய கொள்கை ஒன்று உண்டு. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பார்கள். பரிபூரணநிலைக்கு வந்துள்ள ஒரு சித்தபுருஷணுடைய போக்கைப் பற்றியே நாம் முழுதும் தெரிந்துகொள்ள முடியாது என்றால் இனி பரம்பொருளின் போக்கை முற்றிலும் அறிந்துகொள்ளுவது நமக்கு எப்படி முடியும்? கடவுளுக்கு ஆகாதது ஒன்றுமில்லை. பக்தன் ஒருவனை ஒரு நொடிப்பொழுதில் அவர் எந்த நிலையில் வேண்டுமென்றாலும் உயர்த்தி வைக்கும் பாங்குடையவர். ஆதலால் முற்றிலும் கடவுளைச் சார்ந்திருப்பதே நமக்குப் போதுமானது. யாரறிவார் அவருடைய போக்கை!

ஒரு காலத்தில் ஓரிடத்தில் தவசிகள் இருவர் வசித்திருந்தனர். அவ்வழியாக நாரதமகரிஷி ஒரு தடவை வந்து சேர்ந்தார். அவரை இன்னார் என்று தவசிகள் இருவரும் அடையாளம் தெரிந்துகொண்டனர். அம்முனிவரை நோக்கித் தவசிகளில் ஒருவர் இங்ஙனம் மொழிந்தார்: தேவரீர் தெய்வத்தின் சன்னிதியினின்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் அவரிடம் சென்றிருந்தபொழுது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

நாரத மஹரிஷி: செயற்கரிய செயல்கள் சிலவற்றை அவர் செய்துகொண்டிருந்ததைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒட்டகம், யானை போன்ற பேருடலம் படைத்த மிருகங்களை ஊசி ஒன்றன் காது வழியாக இப்புறமும், அப்புறமும் நுழைந்து போகும்படி பகவான் செய்துகொண்டிருந்தார். அத்தகைய காட்சியைக் கண்டேன்.

முதல் தபஸ்வி: அதில் வியப்பு என்ன இருக்கிறது? கடவுளுக்கு எதுதான் சாத்தியமல்ல. அவர் எதை வேண்டுமானாலும் செய்ய வல்லவர்.

இரண்டாவது தபஸ்வி: என்ன, பொருந்தாத புன்மொழிகளைப் பகர்கின்றீர்கள்? ஊசியின் காது வழியாக ஒட்டகத்தையும், யானையையும் போகும்படி செய்ய யாருக்காவது இயலுமா? இயற்கையின் நியதிக்கு மாறுபட்ட கோட்பாட்டை நீர் பகர்கின்றீர். உண்மையில் நீவிர் கடவுளுடைய சன்னிதிக்குப் போகவுமில்லை; அத்தகைய காட்சியைக் காணவுமில்லை. பொருந்தாத செயலைப் பற்றிப் பகர்வதே உமது மொழி பொய்மொழி என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

“மெய்யன்பர்களுக்குக் கடவுளின் லீலையில் முற்றிலும் நம்பிக்கை உண்டு. இயற்கையின் நியதி என்பதே அவருடைய பெரிய விளையாட்டு. இயற்கையின் பாங்கை ஒரு நொடிப்பொழுதில் அவர் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றியமைக்க வல்லவர். கடவுளின் அருளைப் பெற்றவர்களுக்கே இக்கோட்பாடு விளங்கும்”.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s