THE GARLAND OF PARAPARAM – 35

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

கண்ணி 35:

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழைநெஞ்சம்

புண்ணாகச் செயததினிப் போதும் பராபரமே.

விளக்கம்:

இடையறாது, ஏதேதோ எண்ணங்களையெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பது மனத்தின் பாங்கு. ஓய்வின்றிக் கடலில் எப்படி அலைகள் உதித்துக் கொண்டிருக்கின்றனவோ அப்படி உள்ளத்தினுள் எண்ணங்கள் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளில் பெரும்பான்மையானவைகள் புல்லியவைகளாம். புல்லிய எண்ணங்களே நெஞ்சத்தைப் புண்ணாக்குகின்றன. நெஞ்சம் புண்ணாகுமளவு மனிதன் ஏழையாகிறான். படைத்திருக்கும் பொருளை முன்னிட்டு மனிதனைப் பணக்காரன் என்று இயம்பலாகாது. திண்ணிய நெஞ்சம் படைத்தவனே பெரிய பேறு படைத்தவனாகிறான். பொருள் மிகப் படைத்திருப்பதற்கிடையில் அற்ப எண்ணங்களில் மனம் உழன்று கொண்டிருக்குமாகில் அம்மனிதன் வறுமை நோயில் வருந்துபவனாகிறான். அப்படியல்லாது மனத்தில் திட்பம் ஊட்டும் மேலான நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும். அத்தகைய நல்ல எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைய வேண்டும். கடைசியாகக் கடவுளைப் பற்றிய ஒரே எண்ணம் நெஞ்சில் நிலைத்திருக்குமாகில் அம்மனிதன் பேறு மிகப் படைத்தவனாகிறான். அப்பெரிய நிலையை வரவழைத்துக் கொள்வது ஆத்மசாதகனுக்குச் சாத்தியமாகிறது.

 -ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழைநெஞ்சம்

புண்ணாகச் செயததினிப் போதும் பராபரமே.

-கண்ணி – 35.

eNNAtha  eNNamellAm  eNNieNNi  Ezai  nenjam

puNNAgach  cheithathinip  pOdum  parAparamE.

Making me think and think

Unthinkable thoughts,

Thou hath sore wounded this poor heart.

Enough, enough what Thou hath done,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Praiseworthy Paraaparam, I have tortured my heart with endless empty thoughts. Do put an end to them.

-Swami Chidbhavananda.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s