Sri Paramahamsarin Apta Mozi – 108

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 108

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 107: https://swamichidbhavananda.wordpress.com/2016/10/13/sri-paramahamsarin-apta-mozi-107/)

மனதினுள் ஆழ்ந்து செல்

நரேந்திரரும் மற்ற அன்பர்களும் கங்கையில் நீராடிவிட்டு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் பஞ்சவடிக்குச் சென்று சிறிது நேரம் தியானம் பண்ண வேண்டுமென்று பரமஹம்ஸர் அவர்களை ஏவினார். அவர்கள் அமர்ந்திருப்பதற்கு வேண்டிய ஆசனங்களையும் அவர் அவர்களுக்கு அளித்தார்.

dk-panchavati2-jpgold-panchavati-at

பஞ்சவடி – பழைய புகைப்படம்

காலை சுமார் பத்தரைமணி ஆய்விட்டது. நரேந்திரர் இன்னும் பஞ்சவடியிலேயே தியானம் பண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் பிரம்ம சமாஜத்து அங்கத்தினர் சிலரும் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அப்பொழுது பரமஹம்ஸர் வந்து சேர்ந்தார். மஹேந்திரரும், அவருடன் அங்கு வந்து சேர்ந்தார். பிரம்ம சமாஜத்து அங்கத்தினர்களிடம் பரமஹம்ஸர் அரிய கருத்து ஒன்றை வெளியிட்டார்.

“கடலின் மேற்பரப்பில் நீந்திக் கொண்டிருப்பதால் ஆவது ஒன்றுமில்லை. கடலுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கினால் கீழே இருக்கும் முத்து, பவளம் முதலியவைகளைப் பெறலாம். தியானம் பண்ணுவதும் அதற்கு நிகரானது. வெறுமனே மனதின் மேற்பரப்பில் திளைத்திருந்தால் போதாது. மனத்தகத்தில் ஆழ்ந்து மூழ்குமளவு நமக்கு நலன் உண்டாகிறது. ஆழ்ந்து மனதினுள் செல்பவர்கள் ஆழ்வார்கள் ஆகிறார்கள். கடவுள் என்னும் விலைமதிக்க முடியாத பொருளை மனதினுள் காணலாம்.

விவேகமும் வைராக்கியமும்

old-view-of-panchavati-at-dakshineswar

பஞ்சவடி – பழைய புகைப்படம்

பஞ்சவடியில் கொஞ்ச நேரம் தியானம் செய்தான பிறகு நரேந்திரரும் அவருடைய அன்பர்களும் பரமஹம்ஸருடைய அறைக்கு வந்து சேர்ந்தார்கள். பரமஹம்ஸர் அவர்களிடம் பகர்வாராயினர்:

“மனிதன் ஒருவன் நீருக்குள்ளே மூழ்கினால் அவனைப் பற்றிப் பிடிக்க முதலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளிடத்திருந்து தப்பித்துக் கொள்ளுதற்கு உபாயம் ஒன்று உண்டு. மேனி முழுதிலும் மஞ்சளைப் பூசிக் கொண்டால் முதலை அருகில் வராது. மஞ்சளி வாசம் அதற்குப் பிடிப்பதில்லை. ஆக, அது எட்ட நின்றுவிடுகிறது. மனிதன் நீரினுள் மூழ்குவது போன்று தனது மனதுக்குள்ளே மூழ்கிப் பழக வேண்டும். மனது என்னும் நீர் நிலையிலும் முதலைகள் இருக்கின்றன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் என்னும் ஆறு முதலைகள் ஆங்கு உலாவித் திரிகின்றன. எந்தவிடத்தில் வேண்டுமானாலும் மனிதன் அவைகளின் பிடிப்பில் அகப்பட்டுவிடுவான். அவைகளிடத்திருந்து தப்பித்துக்கொள்ளுதற்கு உபாயம் ஒன்று உண்டு. விவேகம், வைராக்கியம் என்னும் மஞ்சளைப் பூசிக் கொள்ள வேண்டும். விவேகத்திலும், வைராக்கியத்திலும் நிலைத்திருக்கின்ற சாதகனைக் காமக்குரோதாதிகள் ஆகிய முதலைகள் ஒன்றும் செய்யமாட்டா.

பலபேர் பிரசங்கத்திலும், ஏட்டுக்கல்வியிலும் கருத்தைச் செலுத்துகின்றனர். ஏராளமாகப் பிரசங்கங்கள் செய்வதாலும் புஸ்தகங்களைப் படிப்பதாலும் மனிதனுக்குச் சிறப்பு ஒன்றும் வந்துவிடாது. ஆனால் ஒருவனுக்கு விவேகமும் வைராக்கியமும் இருக்குமாகில் அவன் நல்ல சாதகன் ஆகின்றான். கடவுள் ஒருவரே மெய்ப்பொருள்; ஏனைய யாவும் அநித்தியமானவைகள். இதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்பவர்கள் விவேகமுடையவர்கள் ஆகிறார்கள்”.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s