Sri Paramahamsarin Apta Mozi – 110

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 110

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 109: https://swamichidbhavananda.wordpress.com/2016/10/27/sri-paramahamsarin-apta-mozi-109/)

சாதனத்துக்குத் தடை செய்யும் மனைவி

தயக்கத்துடன் மஹேந்திரர் பரமஹம்ஸரிடம் கேள்வி ஒன்று கேட்டார். “விவாகம் செய்துகொண்டுள்ள ஒருவனிடம் அவனுடைய மனைவி தனக்குரிய கடமைகளையெல்லாம் செய்து நிறைவேற்றும்படி வற்புறுத்துகின்றாள். கணவனுடைய ஆத்மசாதனத்துக்கே ஒருவிதத்தில் தடையாக வந்து நிற்கின்றாள். கணவனுக்கோ ஆத்ம சாதனத்தில் ஈடுபட வேண்டும் என்கின்ற அவா இருக்கின்றது. தனக்குரிய கடமைகளை யெல்லாம் கணவன் நிறைவேற்றாவிட்டால் மனைவி தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்துகின்றாள். அந்த நெருக்கடியில் கணவன் செய்யக் கிடக்கும் கடமை யாதோ?”

பரமஹம்ஸர்: அவள் தற்கொலை செய்துகொள்ளட்டும் அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். கணவனைப் பாரமார்த்திக வாழ்க்கையில் பிரவேசிக்க ஒட்டாது தடுக்கின்றவள் தெய்வீக இயல்புடைய மனையாள் ஆகமாட்டாள். மனிதனுக்கு ஏற்பட்டுள்ள கடமைகளுள் கடவுளை அடைதல் தலையாயது. அதற்கு இடைஞ்சலாக எதெல்லாம் குறுக்கிடுகின்றதோ அதை மனிதன் அறவே புறக்கணித்துவிடலாம். அதனால் குற்றம் ஒன்றும் உண்டாகாது.

இதற்குச் செவிகொடுத்த மஹேந்திரர் ஆழ்ந்து சிந்தனையில் மூழ்கிவிட்டார். சுவரின் மீது சாய்ந்து நின்றுகொண்டு தமது நிலைமையைப் பற்றி அவர் எண்ணிக் கொண்டிருந்தார். நரேந்திரர் முதலாயினோரும் சிறிது நேரம் மௌனமுற்றிருந்தனர். பரமஹம்ஸர் அவர்களோடு ஏதோ சில வார்த்தைகள் உரையாடினார். பிறகு அவர் மஹேந்திரருக்கு அருகில் வந்தார். மேலாம் கோட்பாடு ஒன்றை மஹேந்திரர் காதுக்குள்ளே அடங்கிய குரலில் ஓதினார். “ஒரு மனிதனுக்கு உண்மையான அன்பு கடவுளிடத்து இருக்குமாகில் அந்த அன்பின் வேகத்தால் அவனுக்கு வரும் இடைஞ்சல்கள் எல்லாம் தாமாக அகன்றுபோய் விடுகின்றன. பொதுவாக மனிதனுக்கு அரசனிடத்திருந்தும், துஷ்டர்களிடத்திருந்தும், மனையாளிடத்திருந்தும் இடைஞ்சல்கள் வருவதுண்டு. ஆழ்ந்த கடவுள் பக்தி அம்மனிதனுக்கு இருக்குமாகில் இம்மூவித இடைஞ்சல்களும் அவனை விட்டுத் தாமே அகன்றுபோய் விடுகின்றன. நாளடைவில் மனைவியின் மனதே மாறிப்போய் விடக்கூடும். அவளுக்கும் கடவுள் பக்தி உண்டாகலாம். கணவனுக்கு இடைஞ்சலாக இருந்தவள் பிறகு கணவனுக்குத் துணைபுரியும் பாங்குடையவளாக மாறிவிடக்கூடும். ஆக, கடவுள் பக்தி ஒன்றே விக்கினங்களையெல்லாம் அகற்றுதற்கு உற்ற உபாயமாகும்.

மஹேந்திரருக்கு உண்டாயிருந்த மனக்குழப்பம் மிகப் பெரிது. மனைவி தற்கொலை செய்து கொள்ளட்டும் அதைக் குறித்து எனக்கென்ன கவலை என்கின்ற கோட்பாடு அவருக்கு ஒருவிதத்திலும் ஆறுதல் அளிக்கவில்லை. தமக்குற்ற கடமைகள் ஒன்றோடொன்று போராடுகின்றன என்று சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது பரமஹம்ஸர் பகர்ந்தது அவருக்குப் பரம சாந்தியை உண்டு பண்ணிற்று.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s